நடிகரும் பிரபல மருத்துவருமான சேதுராமன் திடீர் மாரடைப்பால் காலமானார்:-

2013-ஆம் ஆண்டு வெளியான காதல்-நகைச்சுவைப் படமான “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சேதுராமன். பிரபல டெர்மடாலஜிஸ்ட் மருத்துவரான இவர் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தின் வெற்றிக்குப் பிறகு, மேலும் மூன்று தமிழ் படங்களில் நடித்தார், “வாலிப ராஜா” (2016), “சக்க போடு போடு ராஜா” (2017), மற்றும் “50/50” (2019). சிறந்த மருத்துவராக திகழ்ந்து வந்த இவர் துரதிஷ்டவசமாக நேற்று மாலை திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அதையடுத்து ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்த சந்தானம், இந்த துக்கமான செய்தியை அறிந்ததும், இது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் “என் அன்பு நண்பர் டாக்டர் சேதுவின் மறைவில் முற்றிலும் அதிர்ச்சியும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளேன்.. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply