சுரண்டை வி.கே புதூர் பகுதிகளில் தென்காசி ஆர்டீஓ அதிரடி ஆய்வு- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவு..

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் தென்காசி மாவட்டம் சுரண்டை,வி.கே புதூர் பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுக்கும் பணியில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தென்காசி கோட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.சுரண்டை மற்றும் வீரகேரளம்புதூர் தாலுகா பகுதிகளில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், திறக்கப்பட்டிருக்கும் காய்கறி மார்க்கெட், மருந்தகங்கள், மளிகை கடை, பாலகங்களிலும்  எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தென்காசி கோட்டாட்சியர் பழனிகுமார் நேரில் ஆய்வு செய்தார்.

திறக்கப்பட்டுள்ள கடைகளின் முன்பாக தண்ணீர், தடுப்பு மருந்துகள் போன்றவை வைக்கப்பட்டுளனவா? என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் அவசியமின்றி வெளியே வரக்கூடாது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், அதிகமான மக்கள் கூட கூடாது, சிறுவர்கள் விளையாட வெளியே வரக்கூடாது, என கூறினார். இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்துவதுடன் மக்கள் கூடுவதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடன் வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிஹரன், மண்டல துணை தாசில்தார் சிவன் பெருமாள் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், முருகன் ஆகியோரும் ஈடுபட்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply