வார்டன்னா நாங்க அடிப்போம் கதையாக வெளியே வந்தால் நாங்க அடிப்போம்; செய்தியாளர்கள் மீது போலீஸ் தாக்குதல், டி எஸ் பி பணியிடை நீக்கம்..

வார்டன்னா நாங்க அடிப்போம் கதையாக வெளியே வந்தால் நாங்க அடிப்போம்; செய்தியாளர்கள் மீது போலீஸ் தாக்குதல், டி எஸ் பி பணியிடை நீக்கம்..

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள அனுமான் ஜங்ஷன் என்ற பகுதியில் ஊரடங்கு உத்தரவு, கரோன பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான செய்தி சேகரிக்க தெலுங்கு ஊடகங்களில் வேலை செய்யும் செய்தியாளர்கள் ஆறு பேர் சென்றனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் ஊரடங்கு மற்றும் 144 தடை சட்டம் ஆகியவை அமலில் இருப்பதால் இந்த வழியாக செல்லக்கூடாது என்று தடுத்து நிறுத்தினர்.

ஆனால் செய்தியாளர்கள் தங்களுடைய அடையாள அட்டைகளை காண்பித்து செய்தி சேகரிப்பதற்காக சென்று கொண்டிருக்கிறோம் என்று கூறி போலீசாரை சமாதானம் செய்ய முயன்றனர்.

ஆனால் அங்கு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள், கான்ஸ்டபிள்கள் ஆகியோர் செய்தியாளர்களை கடுமையாக தாக்கினர்.
போலீஸ் தாக்குதலில் செய்தியாளர் 3 பேர் காயமடைந்தனர்.

போலீசாரின் காட்டுமிராண்டி நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட செய்தியாளர்கள் அந்த இடத்திலேயே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

போலீசார் செய்தியாளர்களை தாக்கியது பற்றி தகவலறிந்த கிருஷ்ணா மாவட்ட எஸ்பி, தாக்கிய போலீஸ் அதிகாரிகள் போலீசார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

இது பற்றி பின்னர் அறிவித்த கிருஷ்ணா மாவட்ட எஸ்பி, செய்தியாளர்களை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் போலீசார் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அறிந்த செய்தித்துறை அமைச்சர் பேர்ணி நானி செய்தியாளர்களை தாக்கிய ஏலுார் டி.எஸ்.பியை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அதன்பின் தர்ணாவில் ஈடுபட்ட செய்தியாளர்கள் கலைந்து சென்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply