நீலகிரி மாவட்டத்திற்கு வெளிநாடு, மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்த 732 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்:-மாவட்ட ஆட்சியர்..

நீலகிரி மாவட்டத்திற்கு வெளிநாடு, மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்த 732 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்:-மாவட்ட ஆட்சியர்..

இவர்கள் விட்டை விட்டு வெளியே வந்தால் கைது உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நீலகிரி.மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி.இன்னசென்ட் திவ்யா இன்று செய்தியாளர்களை பேட்டி.அளித்தார்.

கொரோனோ வைரஸ்.மிக வேகமாக பரவி வருகிறது இதை மக்கள் உணர வேண்டும் குழுக்களாக தெருக்களில் விளையாட கூடாது அரசின் வேண்டுகோளுக்கு உத்தரவுக்கு செவி சாய்த்து ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

உதகை தலைமை மருத்தவமனையில் டாயாலிஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது 68 ஆம்புலன்கள் தயார் நிலையில் உள்ளன.

யாரும் பயப்பட தேவையில்லை மக்களுக்கு தேவையான அடிப்படை மருத்துவத்திற்கு வெளி மாவட்டத்திற்கோ வெளி மாநிலத்திற்கோ செல்ல தேவையில்லை அரசு மருத்துவமனையில் தரமான சிகிழ்ச்சை.அளிக்கப்படுகிறது.

காய்கறி மற்றும் மளிகை கடைகாரர்கள் பொதுமக்களை தள்ளி தள்ளி நின்று பொருள்களை வாங்கும் வகையில் ஒழுங்கு படுத்த வேண்டும்.

விவசாய.பணிகளுக்கு எந்த தடையும் இல்லை ஆனால் குறைந்த ஆட்களுடன் தள்ளி தள்ளி நின்று பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் வெளிநாடு, மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்த 732 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் 585 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

இவர்கள் எந்த காரணத்தை கொண்டும் விட்டை விட்டு வெளியேவர கூடாது வந்தால் கைது உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

7 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பட்டு அவை நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன இருந்தாலும் இவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அரசு அறிவித்துள்ள அனைத்து நிவாரணங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்படும்

கிராமபுற பகுதிகளில் இருந்து உதகை வந்து அத்தாவசிய.பொருட்களை வாங்க சிரமம் ஏற்பட்டுள்ளதை அறிந்து பிக்கப் வாகனங்களில் காய்கறி.உள்ளிட்ட அத்தாவசிய.பொருட்கள் கிராம தெருக்களில் கொண்டு சென்று விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

தமிழக முதல்வர் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார் அதன் படி.காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்க மார்கெட் உழவர் சந்தையில் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க உதகை ஏ.டி.சி. பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் மற்றும் பேருந்து நிலையத்தில் காய்கறி உள்ளிட்டவை . விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளது

மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

மாநில அரசின் உத்தரவு படி மாவட்ட.நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க.வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திருமதி.இன்னசென்ட் திவ்யா கேட்டு கொண்டார்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply