கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள்-காவல்துறை எச்சரிக்கை..

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள்-காவல்துறை எச்சரிக்கை..

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

ஆனால் வெளியூர்களில் இருந்து வந்த மாணவர்கள் பொதுமக்கள் கொரோனா வைரஸ் வீரியத்தின் தன் மையை அறியாமல் தங்களை தனிமைப்படுத்தாமல் பைக்குகளிலும், கார்களிலும் வலம் வந்தனர். மாணவர்கள் விடுமுறை போல் கிரிக்கெட் விளையாடி வெளியே சுற்றியவர்களையும் கிரிக்கெட் விளையாடியவர்களையும் போலீஸார் எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து கூட்டம் கூடினால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தனர்.

சுரண்டை பகுதியில் இன்ஸ்பெக்டர்மாரீஸ்வரி, எஸ் ஐ ஜெயராஜ் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். காலை முதல் பைக்குகளில் வருபவர்களை எச்சரித்து கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.

போலீசாரின் எச்சரிக்கைகையை மீறி தொடர்ந்து பைக்கில் வந்த பங்களா சுரண்டை தெற்கு தெரு வைச் சேர்ந்த செல்வம்  மகன் பால்ராஜ்(24) மீது எஸ்.ஐ. ஜெயராஜ் வழக்குப்பதிந்து கைது செய்தார். இரண்டாவது முறை தொடர்ந்தால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படும் என்று எச்சரித்து சொந்த ஜாமீனில் விடுவிக்கபட்டார்.

மேலும் போலீசார் ஆட்டோ மூலம் அனைத்து கிராமங்களுக்கும் சென்று கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்தும், 144 தடை உத்தரவு குறித்தும் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் செய்தனர்.

முன்னதாக தென்காசி ஆர்டிஓ பழனிக்குமார், தாசில்தார் ஹரிகரன் சுரண்டை பகுதியில் ஆய்வு செய்து தடுப்பு பணிகளை துரிதப்படுத்து உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..