கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனைகளிலும், விரிவான முதலமைச்சர் காப்பீடுத் திட்டத்திலும், அதே போன்று அரசு ஊழியர்கள் காப்பீடு திட்டத்திலும் சேர்க்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்…  

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனைகளிலும், விரிவான முதலமைச்சர் காப்பீடுத் திட்டத்திலும், அதே போன்று அரசு ஊழியர்கள் காப்பீடு திட்டத்திலும் சேர்க்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்…

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்தவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்,
இந்திவிலும் இது வேகமாக பரவிருகிறது குறிப்பாக வெளிநாட்டில் இருந்து இந்தியவிற்கு வருபவர்களிடமிருந்து பரவுகிறது,,இந்தியாவில் 600கும் மேள்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள், சிக்கிச்சை பலன் இல்லாமல் இதுவரையில் 10 பேர் மரணமடைந்துள்ளனர்.

தமிழகத்திலும் இதுவரையில் 23 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையாக பெற்றுவருகிறார்கள் இதுலே மதுரையை சேர்ந்த ஒருவரும் உயிர் இறந்துள்ளர், தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அனைத்து ரேசன் அட்டைதாரர்களும் நிவாரணமாக ரூ.1000 மற்றும் ரேசன் கடைகளில் பொருட்கள் இலவசமாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார் அமைப்பு சாரா தொழிலாளர் அட்டோ ஓட்டுநர் , கூடுதலாக ஆயிரம் கூடுதலாக ரூ 1000 வழங்குழவது வரவேற்றதக்கது, மருத்துவப்பணி செய்யும் அனைவுருக்கும் ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்பது வலவேற்க தக்கது, அதே போன்று தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுப்படும் ஊழியர்கள் மற்றும், காவல்த்துறையினரும் சிறப்பூதியம் வழங்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்,

கொரோனா வைரஸ் சம்மந்தமாக பரிசோதனையை தனியார் மருத்துவமனைகளும் மேற்கொள்ளலாம் என்று முதல்வர் அவர்கள் அறிவித்திருக் கின்றார்கள் அதற்கு விதிக்கும் கட்டணம் ரூ.4500குள் இருக்கவேண்டும் என்று அறிவித்திருப்பதை கூட்டமைப்பு வரவேற்கிறது.

கொரோனா வைரஸ் பரிசோதனையை தனியார் மருத்துவமனைகளிலும் அனைவரும் மேற்கொள்ளும் பொருட்டு முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தில் சேர்த்து அந்த செலவை காப்பீடு நிறுவனம் ஏற்றுக்கொள்ள விதமாக சேர்க்கவேண்டும் ,அதேபோன்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் விரிவான காப்பீடு திட்டத்திலும் சேர்க்கவேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply