மக்கள் சேவைபுரியும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினருக்கும் சிறப்பு ஊதியம் வழங்க அரசுக்கு கோரிக்கை.. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் நன்றி..

தமிழகத்தில் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் அரசு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கியதற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன் அதே வகையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும், காவல்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் இதேபோன்று ஒரு மாத கால சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தேமுதிக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 108ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இருளாண்டி கூறுகையில், “கடும் வெயிலையும் பாராமல் காவலர்களும் , 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கொரோனா நோயில் இருந்து மக்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கையில் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் அதனை கருத்தில் கொண்டு இந்த பணிகளை செய்துவரும் அனைவருடைய சார்பாக தேமுதிக தலைவருக்கு எனது வாழ்த்துக்களையும், வரவேற்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply