மதுரையில் வீடு இன்றி சாலையில் திரிந்த நபர்கள் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் முகாமுக்கு அனுப்பி வைப்பு..

மதுரையில் இன்று (26/03/2020) வீடு இன்றி சாலையில் திரிந்த நபர்கள் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 79 ஆவது வார்டு டவுன்ஹால் ரோடு பகுதியில் சுமார் 10 பேர் சமையல் வேலைக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து பணியில் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஊருக்கு செல்ல வழியில்லாமல் சாலையிலேயே இருந்துள்ளார்கள். இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் அம்மக்களுக்கு உணவளித்து, பின் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அஅதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள் சுகாதார அதிகாரி ரமேஷ், சுகாதார ஆய்வாளர் சுப்பு ராஜ் மற்றும் சிவசுப்பிரமணியம்,  மாநகராட்சி ஊழியர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விபட்டியில் உள்ள மாநகராட்சி காப்பகத்தில் மருத்துவ பரிசோதனை செய்தபின், ஊரடங்கு உத்தரவு தளர்த்தும் வரை தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என தகவல் தெரிவித்தனர்.

மேலும் அவர்களுக்கு மூன்று வேளையும் அம்மா உணவகத்தில் இருந்து இலவசமாக உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு உத்தரவு  நீக்கிய பிறகு அவரவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் ஏற்கனவே இதில் 30க்கும் மேற்பட்டோர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பழங்காநத்தம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் இனி வரும் நபர்களை அங்க தங்க வைக்க ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், தேவையான உணவுகளை பழங்காநத்தம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply