அரசு அறிவித்துள்ள ஊடரங்கு உத்தரவை கடைபிடித்து இந்தியாவை காப்பாற்ற வீட்டுக்குள்ளேயே இருங்கள்:-  இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வேண்டுகோள்

அரசு அறிவித்துள்ள ஊடரங்கு உத்தரவை கடைபிடித்து இந்தியாவை காப்பாற்ற வீட்டுக்குள்ளேயே இருங்கள்:-  இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வேண்டுகோள்..

சமூக விலகல் மூலமாக மட்டுமே கொரோனாவின் தாக்கத்தை ஒடுக்க முடியும் எனத் தெரிவித்த பாரத பிரதமர் மோடி, இன்றிலிருந்து 21 நாட்களுக்கு ஊடரங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் நாட்டு மக்களுக்கான அவரது 2-வது உரையில் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தியாவை காப்பாற்ற வீட்டுக்குள்ளேயே இருங்கள் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா உடன் இணைந்து மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 தற்போது நம்மை பரிசோதிப்பதற்கான நேரம் இது. இந்த சூழ்நிலையில் அபாயகரத்தை புரிந்து கொண்டு விழித்திட வேண்டியது நமக்கு அவசியமானது. அரசு என்ன சொன்னதோ அதை அப்படியே பின்பற்றுங்கள். ஒன்றாக இணைந்திருப்போம். இது ஒவ்வொருவருக்குமான வேண்டுகோள். வீட்டிற்குள்ளே இருங்கள். கொரோனா வைரசில் இருந்து உங்களுடைய குடும்பத்தை காப்பாற்றுங்கள்.

ஊரடங்கு உத்தரவை நீங்கள் உதாசீனம் படுத்தினால் ஒட்டுமொத்த நாடும் மிகப்பெரிய அளவில் விலைகொடுக்க வேண்டியது நிலை ஏற்படும். உங்கள் ஒற்றுமையை காட்டுங்கள். உயிரையும் நாட்டையும் காப்பாற்றுங்கள் என கூறியுள்ளார்…

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply