Home செய்திகள் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கும் என உத்தரவிட்டிருந்தும் கூட, தமிழகம் முழுவதும் கடைகளை மூடச் சொல்லி நேற்று இரவும், இன்று காலையிலும் காவல்துறையினர் கட்டாயப்படுத்தி அராஜகம் செய்து வருவதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனம்..

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கும் என உத்தரவிட்டிருந்தும் கூட, தமிழகம் முழுவதும் கடைகளை மூடச் சொல்லி நேற்று இரவும், இன்று காலையிலும் காவல்துறையினர் கட்டாயப்படுத்தி அராஜகம் செய்து வருவதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனம்..

by Askar

கொரானா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் 144தடை உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கும் என உத்தரவிட்டிருந்தும் கூட தமிழகம் முழுவதும் பால், மளிகை, காய்கறி கடைகள், உணவகங்களை மூடச் சொல்லி நேற்று இரவும், இன்று காலையிலும் காவல்துறையினர் கட்டாயப்படுத்தி அராஜகம் செய்து வருவதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை புரிந்து கொள்ளாமல் காவல்துறையினர் இதே நிலையை தொடர்ந்து கடைபிடித்தால் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துரைக்க கடமைப்பட்டுள்ளோம்.

எனவே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை, விநியோகம் செய்யும் கடைகளுக்கு அரசு விதிவிலக்கு கொடுத்திருப்பதை காவல்துறையினர் புரிந்து கொண்டு மக்கள் நலப்பணியில் வணிகர்கள் ஈடுபட ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம்.

காவல்துறை தொடர்ந்து அது போன்ற அராஜகத்தில் ஈடுபட்டால் அத்தியாவசிய பொருட்களின் கடைகளை முழுமையாக மூட நேரிடும் என்பதையும் தமிழக அரசுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன் சு.ஆ.பொன்னுசாமி (நிறுவனர் & மாநில தலைவர்) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!