மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மந்திரிசபை கூட்டத்தில் பங்கேற்ற மத்திய மந்திரிகள் இன்று சமூக விலகலைப் பின்பற்றினர்..

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மந்திரிசபை கூட்டத்தில் பங்கேற்ற மத்திய மந்திரிகள் இன்று சமூக விலகலைப் பின்பற்றினர்..

சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தலை பின்பற்றுவதன்மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை பெருமளவிற்கு கட்டுப்படுத்த முடியும். எனவே, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் சமூக விலகலை கண்டிப்பாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற காரணங்களுக்காக வீடுகளை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த காவல்துறையினர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் தீவிர களப் பணியாற்றி வருகின்றனர். மேலும் மக்களுக்கு சமூக விலகல் தொடர்பாக விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய மந்திரிகள் அனைவரும், அருகருகே அமராமல் இடைவெளி விட்டு நாற்காலிகளை போட்டு அமர்ந்திருந்தனர்.

இவ்வாறு மத்திய மந்திரிகள் சமூக விலகலை பின்பற்றியது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..