விழித்திருங்கள்.. விலகி இருங்கள்.. வீட்டில் இருங்கள்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்..

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என்பது, உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்ளத்தான். இது விடுமுறையல்ல” என்று தமிழக மக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை செய்துள்ளார். தமிழக மக்களுக்கு முதல்வர் விடுத்துள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

அன்பான சகோதர சகோதரிகளே, இந்த நேரத்தில் நான் தமிழக முதலமைச்சராக இல்லாமல் உங்களில் ஒருவனாக உங்கள் குடும்பத்தின் ஒருவனாக பேசுகிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள். உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி காட்டுத் தீ போல் வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசின் வேண்டுகோள்படி நாம் 21 நாட்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்.

தனிமைப்படுத்துதல் என்பது உங்கள் குடும்பத்தையும், நாட்டையும், சமூகத்தையும் பாதுகாப்பதற்காகத்தான். 21 நாட்கள் என்பது விடுமுறையல்ல. உங்களையும், உங்களது குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைப் பொருட்களான காய்கறி, பால், இறைச்சி போன்றவை மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுய மருத்துவம் செய்ய வேண்டாம். காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் தனியார், அரசு மருத்துவமனையை நாடுங்கள். வெளியே சென்று விட்டு வீடு திரும்பினால் கை,கால்களை கழுவ வேண்டும்.

வீண் வதந்திகளை பரப்புவோர்கள் மீது மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..