மதுரையில் தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் ஆம்புலன்ஸ் இணைந்து ஆதவற்றவர்கள் மீட்கப்பட்டு மண்டபத்தில் தங்க வைப்பு…

கொரோனா வைரசால் பலதரப்பட்ட மக்கள் அன்றாட வாழ்வாதரத்திற்கு பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் வீடில்லாமல் தெருவோரம் மற்றும் ஆலையங்களில் வாழ்ந்து வந்த  ஆதரவற்றவர்களை  தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மீட்கப்பட்டு மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் மசூதி அருகே சுமார் 14 நபர்களை மதுரை நேதாஜி ஆம்புலன்ஸ் ஹரிகிருஷ்ணன் தலைமையில், நியூ கிரியேஷன்ஸ் ட்ரஸ்ட் குளோரி தேபோரா இணைந்து ஆதரவற்ற நிலையில் இருந்த முதியோர்களை மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள முருகன் கோவில் மாநகராட்சி விடுதியில் சேர்க்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து மீட்கப்பட்டவர்களுக்கு  மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பாதிப்பு இருப்பினும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்படும் எனவும் தகவல் தெரிவித்தனர். மேலும் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அனுமதியுடன் மனநிலை பாதிக்கப்பட்டு சாலையோரம் திரியும் நபர்களையும் மீட்கும் நடவடிக்கையில் எடுக்கப்படும் என தொண்டு நிறுவனத்தை சார்ந்த குளோரி தேபோரா,  நேதாஜி ஆம்புலன்ஸ் மூலமாக மீட்கப்படும் என தகவல் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image