Home செய்திகள் இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு: நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது-பிரதமர் மோடி

இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு: நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது-பிரதமர் மோடி

by Askar

 மக்களிடையே இன்று உரையாற்றிய பிரதமர் மோடி ” ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. சமூக விலகல் தவிர்க்க முடியாதது. குழந்தைகள், பெரியவர்கள், வியாபாரிகள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு குறித்து மீண்டும் ஒருமுறை பேச வந்திருக்கிறேன். மக்கள் ஊரடங்கை மிகவும் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய மக்களுக்கு நன்றி. கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்கக் கூடாது. கொரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை; நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக விலகலே வைரஸ் பரவுவதை தடுக்க சிறந்த வழி என்பது தெளிவாகியுள்ளது” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் ” கொரோனாவை விளையாட்டாக நினைக்காதீர்கள்; ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பு இருக்கிறது. இன்றிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் ஊரங்கு என்பது உங்களை குடும்பத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிறது ஒத்துழைக்க வேண்டும். அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும்.

மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை ” என்றார்.

கொரோனாவின் தீவிரத்தை குறித்து பேசிய மோடி ” மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இல்லையெனில் நாம் அழிவை சந்திக்க நேரிடும். உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டிக்குள் அனுமதிக்க வேண்டாம். ஒருத்தருக்கு தெரியாமலேயே கொரோனா அவரை தொற்றக்கூடும், கவனமாக இருங்கள். காட்டுத்தீ போல கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100 சதவிதம் கட்டுப்படுத்துவது சாத்தியம். ஊரடங்கு மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதுதான். ஊரடங்கு காலமான 21 நாட்களை ஆக்கப்பூர்வமக்க மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!