Home செய்திகள்உலக செய்திகள் உலக வானிலை நாள் (World Meteorological Day) (மார்ச் 23).

உலக வானிலை நாள் (World Meteorological Day) (மார்ச் 23).

by mohan

உலக வானிலை நாள் ( World Meteorological Day ); இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும். ஒவ்வொரு நாட்டின் வானிலை துறையின் அடிப்படை என்னவென்றால், துல்லியமான வானிலை அறிவிப்புகளை தகுந்த நேரத்தில் கொடுப்பதாகும். இதன் மூலம், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது முக்கியமானதாகும். அந்த விருப்பத்தை நோக்கி செயல்பட எல்லா நாட்டின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

எல்லா நாடுகளுக்கும் இடையே வானிலை தொடர்பான அறிவு, அது சம்பந்தமாக தொழில்நுட்பம், ஆதாரத்தை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு, அதன்மூலமாக வானிலை விவரங்களை வளர்த்து கொள்ள உலக நாடுகள் இடையே ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஏனெனில், ஒருபகுதியில் உள்ள வானிலை நிகழ்வு மற்றொரு பகுதிகளை பாதிக்கக்கூடிய நிலை உள்ளது.

வானிலை, பருவமழை அளவு, மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை போன்ற பல தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையங்கள் தருகின்றன. இவற்றில், பொதுவாக நமக்குத் தெரிவது, இன்று மழை வருமா வராதா, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா போன்ற சில விஷயங்களே. வானிலை பற்றிய மாற்றங்களையும், இயற்கையைப் பாதுகாப்பதின் அவசியத்தையும் நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே உலக வானிலை தினத்தின் நோக்கம். பென்னன்ட்(Pennant) – காற்றின் வேகம் 55-60 mphக்கும்(mph – mile per hour) இடையில் 1950ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ‘உலக வானிலைக் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. இதில் 189 உறுப்பு நாடுகள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் ஒரு கருத்தை மையமாக வைத்து வானிலை நாள் கொண்டாடப்படுகிறது.

கி.மு. 687 – சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அபூர்வமான வானியல் நிகழ்வு. செவ்வாய் கிரகம் பூமியுடன் மோதுவது போல மிக அருகில் நெருங்கி வந்ததாம். இரண்டு கோள்களின் ஈர்ப்பு விசை காரணமாக இரண்டின் சுழற்சியும் சுற்று வேகமும் நிலை தடுமாறியது. இந்த இயற்கை நிகழ்வால் வானில் பெரிய இடி முழுக்கமும் வெடிச்சத்தமும் கேட்டது. ஆஸ்திரியப் படை வீரர்கள் 1,85,000 பேர் அந்த இடத்திலேயே கருகி மாண்டதாக Book of Kings & Chronicles என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே இரவில் “புவியே அதிர்ந்தது” விண்மீன்கள் மழை போலப் பொழிந்தன என்று Bamboo Books என்ற சீனப் புத்தகத்திலும் வருணிக்கப்பட்டுள்ளது.

வானிலை மாறுபடுவதால் தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டுமின்றி, மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறைக்கு, சவாலாக திகழ்கிறது. தொழிற்சாலைகளால் காற்றில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிக்கிறது. ஓசோன் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதில் வளரும் நாடுகளை விட,வளர்ந்த நாடுகளுக்கு தான், அதிக பங்கு இருக்கிறது.

வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாட்டால், வரும் காலத்தில் வறட்சி, வெள்ளப் பெருக்கு, புயல் போன்ற பாதிப்புகளை அடிக்கடி சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். வெப்பம் அதிகரிப்பதால் உலகில் உள்ள பனிப்பாறைகள் உருகி எதிர்காலத்தில் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் நிலப்பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். மற்ற நாடுகளைப் போல, இந்தியாவும் நாட்டில் உள்ள நதிகளை இணைப்பது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு பகுதியில் வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க முடியும்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!