Home செய்திகள் கடையநல்லூரில் கொரானொ வைரஸ் தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக தாசில்தார் நலைமையில் ஆலோசனை கூட்டம்.. 

கடையநல்லூரில் கொரானொ வைரஸ் தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக தாசில்தார் நலைமையில் ஆலோசனை கூட்டம்.. 

by Askar

கடையநல்லூரில் கொரானொ வைரஸ் தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக தாசில்தார் நலைமையில் ஆலோசனை கூட்டம்..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இங்கேயுள்ள மக்களில் பெரும்பாலானோர் சவுதி அரேபியா , குவைத், கத்தர், துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகிறார்கள் அங்கிருந்து அதிகமானோர் தற்போது விடுமுறையில் கடையநல்லூர் வருகை தந்துள்ளனர் வரும் நாட்களில் இவர்களின் வருகை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கடையநல்லூருக்கு 60க்கும் மேற்பட்ட நபர்கள் வந்துள்ளனர் இவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் கடையநல்லூரில் கடந்த காலங்களில் பன்றிக்காய்ச்சல் டெங்குகாய்ச்சலால்போன்ற மர்மக் காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு ரெட் அலார்ட் விடப்பட்ட நகரமாகும் தற்போது இந்த நகரத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் மக்கள் வருவதால் மாவட்ட நிர்வாகம் கடையநல்லூரை தனி கவனம் செலுத்தி கண்காணித்து வருகிறது வெளி நாடுகளிலிருந்து வருபவர்களை 15 நாட்களுக்கு வீடுகளில் இருந்து வெளியில் வராமல் தனிக்கவனம் செலுத்தி கண்காணித்து வருகிறது இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வருவோர் மூலம் கடையநல்லூருக்கு கொரேனா வைரஸ் வராமல் தடுக்க வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடையநல்லூர் தாசில்தார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நகராட்சியில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அப்துல் பாசித், நிரஞ்சர் ஒலி முஸ்லிம் லீக் சார்பில் செய்து மசூத் அப்துல் லத்தீப் ஜமாஅத்துல் உலமா சார்பில் நகர செயலாளர் செய்யது இப்ராஹீம் அரசு தலைமை ஹாஜி முஹைதீன் அன்சாரி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் சாதிக் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் சைபுல்லா ஹாஜா பஷீர் அஹமத் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் டாக்டர்கள் மீனாட்சி, ரவி, சையது சமீம் ஆயிஷா, ரஞ்சித் வினோத்,ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீரான் மைதீன் காவல்துறை உதவி ஆய்வாளர் மாரிமுத்து, வருவாய் ஆய்வாளர் முருகன், சுகாதார ஆய்வாளர் சேகர், சுகாதார தடுப்பு மேற்பார்வையாளர் புன்னைவனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது தாசில்தால் கூறியதாவது தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் நகரத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வருகை தருவது அதிக அளவில் இருப்பதால் மேலும் வெளிநாடுகளிலிருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அவர்கள் மூலம் இந்த வைரஸ் பரவாமல் இருக்க அவர்களை தொடர்ந்து மருத்துவ குழுவினர் மூலம் 15 நாள் வரை கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில் இந்த வைரஸ் தீவிரம் அடையாமல் இருப்பதற்கு பள்ளிவாசல் ஜமாத்தார்கள், மதகுருமார்கள், இஸ்லாமிய அமைப்புகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென கடையநல்லூர் தாசில்தார் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் நகர ஜமாத்துல் உலமா சார்பில் அதன் செயலாளர் செய்யது இபுராகிம் கூறியதாவது பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வரக்கூடியவர்களில் குழந்தைகள் முதியவர்கள் மட்டும் வீடுகளில் தொழுது கொள்ள வேண்டும் என ஜமாத்துல் உலமா சபை சார்பில் சுற்றறிக்கை விடப்பட்டு இருப்பதை எடுத்துக்கூறினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பேட்டை கிளை செயலாளர் நிரஞ்சன் ஒலி கூறியதாவது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 14 நாட்கள் வீட்டிலேயே சுய பாதுகாப்பு கருதி இருக்க வேண்டும் எனவும், 10 வயதுக்கு உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் , ஒவ்வாமையுடையவர்கள் அனைவரும் வீட்டில் இருப்பதே சுய பாதுகாப்பான விசயம் என்பதையும் வரக்கூடிய இரண்டு வாரங்களில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மெகாபோன் மூலம் விழிப்புணர்வு செய்யப்படும் என்றார்மஸ்ஜித் முபாரக் சார்பிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பிலும் இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!