Home செய்திகள் கொரோனாவைப் பற்றி தவறாக கூறிய ரஜினி:- வீடியோவை நீக்கிய ட்விட்டர்..

கொரோனாவைப் பற்றி தவறாக கூறிய ரஜினி:- வீடியோவை நீக்கிய ட்விட்டர்..

by Askar

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாளை முழு சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது கட்டத்தில் இருக்கிறது. அது மூன்றாவது கட்டத்திற்கு போய்விடக்கூடாது. ஜனங்கள் நடமாடுகின்ற இடங்களில் உள்ள கொரோனா வைரஸ் 12 இல் இருந்து 14 மணிநேரம் அது பரவாமல் இருந்தாலே அதை மூன்றாவது கட்டத்திற்குப் போகவிடாமல் தடுத்துவிடலாம். அதற்காகதான் பிரதமர் மோடி அவர்கள் 14 மணிநேர சுய ஊரடங்கு உத்தரவு கொடுத்துள்ளார்கள்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் கூறிய தகவல்களில் சில பிழைகள் உள்ளதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவரது ட்விட்டர் பக்கத்தில் நீக்கப்பட்டுள்ளது. 14 மணி நேரம் வரை பரவாமல் இருந்தால் 3வது நிலையை தவிர்க்கலாம் என ரஜினி கூறியிருந்தார். இது தங்களது விதிமுறைக்கு எதிரானது எனக்கூறி ட்விட்டர் நிறுவனம் ரஜினி வீடியோவை நீக்கியுள்ளது. ஆனால் யுடியூப் பக்கத்தில் வெளியான வீடியோ அப்படியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!