Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மனிதநேயத்துக்கு அடையாளமாக மதுரை ஆம்புலன்ஸ் உரிமையாளர்… நிர்கதியான பத்திரிக்கையாளர் குடும்பத்துக்கு நிதி உதவி கோரிக்கை..

மனிதநேயத்துக்கு அடையாளமாக மதுரை ஆம்புலன்ஸ் உரிமையாளர்… நிர்கதியான பத்திரிக்கையாளர் குடும்பத்துக்கு நிதி உதவி கோரிக்கை..

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே கல்மேடு பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவர், இவருக்கு வயது 48.,  இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளன. இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கையில் வேலை பார்த்து வந்த நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான காரணத்தினால் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவர் நேற்று (20/03/2020) இரவு அவர் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அத்தகவலறிந்த சிலைமான் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நேதாஜி ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின் இன்று (21/03/2020) பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, அவரது மனைவியால் அடக்கம் செய்யக்கூட போதிய பணவசதி இல்லாத காரணத்தினால் என்ன செய்வதென்று இருந்துள்ள நிலையில், நேதாஜி ஆம்புலன்ஸ் உரிமையாளர் திரு ஹரிகிருஷ்ணன் நேரடியாக சென்று வாகன வசதி உட்பட மயானத்தில் எரியூட்டும் வரை அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டு,  அவரை அவருடைய சொந்த ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்று மதுரையிலுள்ள கீரத்துரை மின்மயானத்தில் அடக்கம் செய்துள்ளார்.

இந்நிலையில் இறந்தவரின் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் எதிர்காலம் கேள்விகுறியான நிலையில் உள்ளனர். இதை  கவனத்தில் கொண்டும், இறந்தவர்கள் பத்திரிக்கை துறையில. பணியாற்றியவர் என்ற அடிப்படையில் பத்திரிக்கை நண்பர்கள், சங்கங்கள் பாதிக்ப்பட்ட குடும்பத்திற்கு உதவி செய்யுமாறு ஆம்புலன்ஸ் உரிமையாளர் கோரிக்கை வைத்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!