கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை கரணமாக ராமேஸ்வரம் கோயில் மூடல்… ராமநாதபுரம் முருகன் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா நிறுத்தம்..

கொரானா வைரஸ் பரவல் எதிரொலியால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவுப்படி  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சுவாமி தரிசனத்திற்கு வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆயிரகணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர். கொரானா வைரஸ் பரவலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இன்று (மார்ச் 20) முதல் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதே போல் இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் 10 நாள் பங்குனி உத்திர பெருவிழா, இந்தாண்டு 80வது பங்குனி உத்திரப் பெருவிழா மார்ச் 28ம் தேதி காப்புடன் தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி உத்திர பெருவிழா, பூக்குளி நிகழ்ச்சிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புபடி உத்திர விழா இந்தாண்டு நிறுத்தப்படுவதாக கோயில் தர்மகர்த்தா சு.கணேசன் தெரிவித்துள்ளார்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal