திருப்பூரில் மதக்கலவரத்தை ஏற்படுத்துவதற்காக தன்னை வெட்ட தானே ஆள் செட் செய்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி:- காவல்துறையினர் கடும் எச்சரிக்கை..

திருப்பூரில் மதக்கலவரத்தை ஏற்படுத்துவதற்காக தன்னை வெட்ட தானே ஆள் செட் செய்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி:- காவல்துறையினர் கடும் எச்சரிக்கை..

திருப்பூர் மாவட்டம், அவினாசி உட்கோட்டம், பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணக்கம்பாளையம் பகுதியில் இந்து மக்கள் கட்சி சேர்ந்த பகவான் நந்து (எ) நந்த கோபால் வயது 50. இவர் தனது SR எலக்ட்ரிக்கல்ஸ் கடையை நேற்று 17.03.2020 இரவு சுமார் 21.00 மணிக்கு மூடிய பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தவரை மூன்று இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைகள் மற்றும் தோளில் கத்தியால் தாக்கியதாகவும், அதில் பல இடங்களில் காயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிகழ்வு சம்மந்தமாக மேற்கண்ட நந்து (எ) நந்தகோபால் (எ) பகவானின் புகாரின் பேரில் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்நிகழ்வு பதற்ற சூழ்நிலையை உருவாக்கக் கூடும் என்பதால் அப்பகுதியில் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மேற்கண்ட வழக்கின் எதிரிகளை கைது செய்யும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மிட்டல் இ.கா.பா., அவர்களின் உத்தரவின் படி 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கண்ட நந்து (எ) நந்த கோபால் (எ) பகவான் தனது சுய விளம்பரத்திற்காக தனது வாகன ஓட்டுனர் ருத்ரமூர்த்தி  என்பவர் தனது முதலாலியின் வேண்டுகோளுக்கு இணங்க கூட்டாக முடிவு செய்து மேற்படி நந்து (எ) நந்தகோபால் (எ) பகவான் என்பவரை கத்தியால் முதுகில் கிழித்ததாகவும், அதன் பின் நந்து தனது இரண்டு கைகளில் காயத்தினை ஏற்படுத்திக் கொண்டு அத்தகைய காயத்தினை இதர மதத்தினர் மற்றும் காவி வேஷ்டி கட்டியவர்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவதுடன் கட்சியில் செல்வாக்கு பெற நினைத்து இச்செயலை நந்து (எ) நந்தகோபால் (எ) பகவான் செய்ததாக திருப்பூர் வடக்கு தாசில்தார் அவர்களிடம் ருத்ரமூர்த்தி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருப்பூர் தாசில்தார் வடக்கு அவர்கள் அந்த வாக்குமூலத்துடன் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் ருத்ரமூர்த்தியை ஆஜர் செய்ததை தொடர்ந்து வழக்கின் சட்டப்பிரிவுகளில் மாற்றம் செய்து காவல் துறையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது போன்ற சுய விளம்பரத்திற்காக மற்றும் லாபத்திற்காக பொது மக்கள் மற்றும் இதர மதத்தினரிடையே கலகம் ஏற்படுத்தும் நோக்குடன் செயல்படும் நபர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை காவல் துறை கண்காணிப்பாளர் அவர்கள் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என காவல்துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..