Home செய்திகள் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்படுகிறது என்று அறிவிப்பு கொடுக்கின்றீர்கள். ஆனால் ஆசிரியர்களை பள்ளிக்கு வரச்சொல்கிறீர்களே?? ஆசிரியர்கள் கேள்வி!

நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்படுகிறது என்று அறிவிப்பு கொடுக்கின்றீர்கள். ஆனால் ஆசிரியர்களை பள்ளிக்கு வரச்சொல்கிறீர்களே?? ஆசிரியர்கள் கேள்வி!

by Askar

தமிழக அரசே..! கல்வித்துறையே..! நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்படுகிறது என்று அறிவிப்பு கொடுக்கின்றீர்கள். ஆனால் ஆசிரியர்களை பள்ளிக்கு வரச்சொல்கிறீர்கள்!

மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை என்று பகிரங்கமாக அறிவிப்பை வெளியிட வேண்டியது தானே?

யாரை ஏமாற்ற பள்ளிகள் மூடப்படுகிறது என்று விளம்பரம் கொடுக்கின்றீர்கள்?

ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் பட்சத்தில் ஆங்காங்கே மாணவர்களும் பள்ளி வளாகத்திற்குள்ளே வந்து விளையாடத்தான் செய்கிறார்கள். இப்போது என்ன செய்வீர்கள்?

மாணவர்களுக்கு விடுமுறை கொடுத்து ஆசிரியர்களை பள்ளிக்கு வரச்சொன்னால் எங்கள் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது?

அத்தியாவசிய தேவைகளின்றி பொதுப் போக்குவரத்தை தவிர்க்க வேண்டும் என்று கூறிவிட்டு இரண்டு, மூன்று பேருந்துகள் மாறி ஆசிரியர்களை பள்ளி செல்லச்சொல்வது மட்டும் நியாயமா?

படிக்காத ஒரு பாமரன் கேட்கிறான், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதால் அவர்களுக்கு கொரானோ வந்துவிடாதா என்று! மெத்தப் படித்த அதிகாரிகளே, அந்த பாமரனிடம் அக்கணமே நீங்கள் தோற்றுவிட்டீர்கள்.

மாணவர்களே இல்லால்

யாருக்கு time table போட…?

TLM செய்து யாருக்கு கற்பிக்க…?

QR code video-வை யாருக்கு காண்பிக்க..?

பல QR code-களில் video-வே update செய்யப்படவில்லையே இந்த கொடுமையை என்னவென்று சொல்ல?

இன்னும் மூன்று, நான்கு, வருடங்களுக்குப்பின்னால் சேர உள்ள மாணவர்களின் பட்டியலே எங்களிடம் இருக்கையில் இனிமேல் தான் 5+ பட்டியலை தயார் செய்யப்போகிறோமா?

இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ள பள்ளிகளில் மாணவர்களே இல்லாமல் ஓர் ஆண் ஆசிரியரும் ஒரு பெண் ஆசிரியரும் இருப்பது சொல்லமுடியாத வேதனை…

இந்த தண்டனை பள்ளிகளில் சரியாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு வேதனையையும், அவ்வப்போது வந்து செல்வோருக்கு ஆனந்தத்தையுமே தருகிறது.

தமிழகத்தில் கொரானோ வைரஸ் பரவி வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள்& கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணியாளர்களில் யாராவது ஒருவருக்கு கொரானோ வைரஸ் தொற்று ஏற்படும் பட்சத்தில் அதற்கு தங்கள் உத்தரவே காரணம் என்று தார்மீக பொறுப்பேற்று இந்த அரசு பதவி விலகுமா?

பேருந்தில் எங்களுடன் பயணம் செய்யும் படிக்காத பாமரன் கூட அறிவார்ந்த ஆற்றலுடன் பேசும் நிலையில் இத்தனை கல்வி நிர்வாக அதிகாரிகளும் தங்கள் கருத்தை மேலே எடுத்துக்கூற பயமா? அல்லது தங்கள் பதவி உயர்விற்காக மௌனம் சாதிக்கிறார்களா?

ஓர் அரசாணையோ உத்தரவோ வெளியிடும் போது அதுசார்ந்த துறையிலிருந்து எந்த சந்தேகமும் எழாத வண்ணம் பிறப்பிக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த இரண்டு நாட்களில் எங்களுக்குத்தான் எத்தனை சந்தேகங்கள், எத்தனை குழப்பங்கள்..?

இப்படிக்கு,

வியத்தகு அரசியல்வாதிகள் மற்றும் திறமையான அதிகாரிகளின்கீழ் பணியாற்றுகிறோம் என்ற பெருமையோடு இன்றும் பணியைத் தொடரும் ஆசிரியப்பெருமக்கள்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!