Home செய்திகள் அறிவியல் கண்டுபிடிப்புகளால் பல்வேறு பயன்பெற்றாலும் புத்தகங்கள் படிப்பதையும் மாணவர்கள் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் முனைவர் அறிவுடைநம்பி வேண்டுகோள்..

அறிவியல் கண்டுபிடிப்புகளால் பல்வேறு பயன்பெற்றாலும் புத்தகங்கள் படிப்பதையும் மாணவர்கள் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் முனைவர் அறிவுடைநம்பி வேண்டுகோள்..

by Askar

அறிவியல் கண்டுபிடிப்புகளால் பல்வேறு பயன்பெற்றாலும் புத்தகங்கள் படிப்பதையும் மாணவர்கள் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் முனைவர் அறிவுடைநம்பி வேண்டுகோள்..

திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரியில் ஆண்டு விழா 16.03.2020 அன்று காலை 11.30 மணியளவில் மூக்கப்பிள்ளளை கலையரகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரிப் பெருந்தலைவர் பேராசிரியர் மூ. பொன்னம்பலம் தலைமை தாங்கினார். விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பொன்பெரியசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். விழாவில் கல்லூரிக்குழுத்தலைவர் திரு.பொன்.பாலசுப்ரமணியன் அவர்கள் தமது வாழ்த்துரையில், ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பெற்ற ஆசிரியர், மாணவர் சாதனைகளை விரிவாக விளக்கிப்பேசினார். கல்லூரிச்செயலர் திரு.பொன்.இரவிச்சந்திரன்; பாராட்டுரை வழங்கினார். கல்லூரிக்குழு உறுப்பினர் திருமதி பொன்.சிவனேஸ்வரி, திருமதி மாலா பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் முனைவர் அறிவுடைநம்பி அவர்கள் கலந்து கொண்டு விழாப் பேருரை ஆற்றினார். அவர் தம் உரையில் ஒரு கல்வி நிறுவனம் என்பது குறிப்பிட்ட துறைப் பாடங்களில் கல்வி கொடுப்பதை மட்டும் கடமையாகக் கொள்ளாமல் மாணவர்களின் தலைமைப் பண்புகளை வளர்த்தெடுக்க வேண்டும். இங்கு மாணவர் பேரவை அதனைக் கல்லூரி நிர்வாகம் செயல்படுத்துகிற விதத்தால் தலைமைப் பண்புகளை புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி வளர்த்தெடுக்கிறது என்பதை நேரில் காண்கின்றேன். பல கல்லூரிகளில் மாணவர் பேரவைகளையே கலைத்துவிட்டனர். ஆனால் இந்த கல்லூரியில் மாணவர் பேரவையை சிறப்பாகச் செயல்படுத்துவதோடு மாணவர் பிரதிநிதிகளையும் முறையாக கௌரவப்படுத்துவதை மனமார பாராட்டுகிறேன் என்றார். இன்றைக்கு மாணவர்கள் புத்தகங்கள் படிப்பது குறைந்துவிட்டது. அறிவியல் கண்டுபிடிப்புகளால் பல்வேறு பயன்பெற்றாலும் புத்தகங்கள் படிப்பதையும் மாணவர்கள் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் முகநூல் போன்றவற்றில் முழு நேரத்தையும் தொலைத்துவிடாமல் வாழ்க்கையில் முன்னேறுவதற்குச் சிந்திக்க வேண்டும் என்றார். கல்லூரி மாணவர் எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு மாணவிகளின் எண்ணிக்கை இருப்பதைக் காணும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு காலத்தில் பெண்கள் படிக்கவே முடியாமல் இருந்த நிலைமாறி இன்று காணுகின்ற இடத்தில் எல்லாம் பெண்களே அதிகம் படிப்பதைக் காண முடிகிறது. இது ஒரு நல்ல சமுதாய மாற்றமாகும் என்றார். மற்றும் பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குப் பரிசுப்பொருட்களும் சான்றிதழ்களும் வழங்கினார். விழாவில் இந்த ஆண்டு ஓய்வு பெறும் கணிப்பொறியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர். முருகன் பாராட்டப்பட்டார். விழாவின் இறுதியில் துணை முதல்வர் முனைவர் குமாரராமன்; அவர்கள் நன்றி கூறினார். வேதியியல் துறைப்பேராசிரியை முனைவர் .விஜிசாரல் எலிசபெத் மற்றும் பேராசிரியை விசாலாட்சி விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். விழாவில் தேர்வு நெறியாளர், புலத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் பெற்றோர் சங்கத்தலைவர் ராமதாஸ் மற்றும் மாணவர் பேரவைத் தலைவர் அஜித்குமார் மாணவ பேரவைச் செயலர் மோனிஸ்ரீ மற்றும் மாணவ மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். செய்தி: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!