Home செய்திகள் மத்திய அரசு மற்றும் உலக சுகாதாரத்துறை நிறுவனத்தின் அறிவுறுத்தலை முறையாக பின்பற்றி வருவதாகவும் கொரானா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் அச்சமோ பதட்டமோ அடைய தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்…

மத்திய அரசு மற்றும் உலக சுகாதாரத்துறை நிறுவனத்தின் அறிவுறுத்தலை முறையாக பின்பற்றி வருவதாகவும் கொரானா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் அச்சமோ பதட்டமோ அடைய தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்…

by Askar

மத்திய அரசு மற்றும் உலக சுகாதாரத்துறை நிறுவனத்தின் அறிவுறுத்தலை முறையாக பின்பற்றி வருவதாகவும் கொரானா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் அச்சமோ பதட்டமோ அடைய தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்…

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய சட்டமன்ற எதிர்க் கட்சித்தலைவர் துரைமுருகன், கொரானா விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதாகவும், அனைத்து மாவட்ட மக்கள் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டிருப்பதாக பேசினார். சில மாநிலங்களில் பேரவையை தள்ளி வைத்திருக்கிறார்கள், சில மாநிலங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைத்திருக்கிறார்கள். சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் முறையான பரிசோதனை இல்லை. கூட்டம் கூட்டுவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் எனவும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை கூட்டி சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் துரைமுருகன் வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டமன்றத்தில் பயமோ அச்சமோ வேண்டாம் எனவும் அரசு உங்களை முழுமையாக காப்பாற்றும். முதல்வர் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது . இதில் அனைத்து துறை செயலாளர்களும் கலந்து கொண்டு அவர்கள் வழங்கிய விளக்கத்தை பொற்று கொண்டு, தெளிவான விளக்கத்தை முதல்வர் அளித்துள்ளார். எல்லையோரம் அமைந்துள்ள 16 மாவட்டங்களில் மால்கள், கல்யாண் மண்டங்கள், திரையரங்கள் மூடவும், 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று உறுப்பினர் மாவட்டமான வேலுர், ராணிப்பேட்டை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களும் முதல்வர் அறிவித்துள்ள 16 மாவட்டங்களில் அமைந்துள்ளது. ஆந்திர, கேரளா உள்ளிட்ட அண்டை மாநில எல்லைகளை காவல்துறை, வருவாய், சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து 24 மணி நேரம் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் இருந்தாலும் கூட, தமிழகத்தில் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் குணமடைந்துள்ளார். அவரும் இன்று மாலை இல்லம் திரும்ப உள்ளார் என்பதை இனிய செய்தி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். மேலும் சுகாதாரத்துறைக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே மேற்கொள்ள 60 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை கூடுவது குறித்து எதிர்கட்சி துணை தலைவர் தெரிவித்திருந்தார், பாராளுமன்றமே தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து இன்று மாலை கூடி முடிவு செய்ய உள்ளனர். மத்திய அரசு மற்றும் உலக சுகாதாரத்துறை நிறுவனத்தின் அறிவுறுத்தலை முறையாக பின்பற்றி வருகிறோம் எனவும் பொதுமக்கள் பதட்டமோ பீதியடையவோ தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!