அழிவின் விளிம்பில் இருந்து பனை மரங்களை காக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்: அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு..

தமிழக விவசாயிகள், இயற்கை பாதுகாப்பு, சமூக ஆர்வலர்கள் சார்பில் பனை பாதுகாப்பு மாநாடு இராமநாதபுரத்தில் நடந்தது.  தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜ|ன் பேசியதாவது:

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிக பனை மரங்கள் உள்ளன. 1947ல் 5.1 கோடி பனை மரங்கள் இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மாறுபட்ட கணக்கு கூறப்படுகிறது. எதை கேட்டாலும் தருவதால் பனை கற்பதரு என அழைக்கப்படுகிறது. நீர் ஆதாரங்களை காப்பதில் பனை மரங்கள் முக்கிய பங்கு வகிக்கிற.  பனை தொழிலாளர் வாரிய உறுப்பினர்களுக்கு கூடுதல் சலுகைகள் செய்து தர பரிந்துரைக்கப்படும். முதிர்ந்த பனை மரங்கள் விற்பனை தொழில் முறைப்படுத்த முயற்சி எடுக்கப்படும். பனைத் தொழிலாளர்களுக்கு மரம் ஏறும் உபகரணம் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  கள் உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பனை பொருட்கள் உற்பத்தி, சந்தைப்படுத்தல், சலுகை வழங்குதல் உள்ளிட்டபனை தொழிலாளர்களின் அனைத்து பிரச்னைகளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால், அழிவின் விளிம்பில் இருந்து  பனை மரங்களை பாதுகாக்க வேண்டும். என்றார்.

சட்ட மன்ற உறுப்பினர்கள் எம். மணிகண்டன் (இராமநாதபுரம்), என். சதன் பிரபாகர் (பரமக்குடி), ராம்கோ கூட்டுறவு சேர்மன் செ.முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்-மாவட்ட செயலர் (அதிமுக) எம்.ஏ.முனியசாமி, பனையெனும் கற்பகத்தரு நிறுவனர் கவிதா காந்தி, அகில இந்திய சத்திரிய நாடார் சங்க பொதுச்செயலர் காந்தி ராஜன், மாநில .பனை வெல்ல வாரியத்தலைவர் சேதுபாலசிங்கம், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, தமிழ்நாடு நாடார் பேரவை மாநில பொருளாளர் சதாசிவம், கார்கில் போர் வீரர் செல்வராமலிங்கம், சேலம் தாய் மர அறக்கட்டளை தேவி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க மகளிரணி மாநில தலைவர் விக்டோரியா பாக்கியராஜ், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தர்மர், அதிமுக ஒன்றிய செயலர்கள் அந்தோணிராஜ், காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..