Home செய்திகள் பாலக்கோடு பகுதியில் மகாபாரத நிகழ்ச்சி என்ற போர்வையில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக நடைபெறும் ” லங்கர் கட்டை” சூதாட்டம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு..

பாலக்கோடு பகுதியில் மகாபாரத நிகழ்ச்சி என்ற போர்வையில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக நடைபெறும் ” லங்கர் கட்டை” சூதாட்டம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு..

by Askar
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகள் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. தொடர்ந்து பருவமழை பொய்த்துப்போன நிலையில் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி உள்ளது மேலும் விவசாயிகள் வெளி மாவட்ட, வெளிமாநிலங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் வெப்பம் அதிகமாக இருப்பதால்  பொதுமக்கள் இரவு நேரங்களில் நடத்தப்படும் மகாபாரத நிகழ்ச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது இது பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு  விவசாயிகள், கூலி தொழிலாளிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்களை குறிவைத்து சில மர்ம நபர்கள் பணம் வைத்து நடத்தப்படும் லங்கர் கட்டை சூதாட்டத்தை நடத்தி  அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரவு 10 மணிக்கு மேல் தொடங்கும் சூதாட்டம் ஒட்டர்திண்ணை, ஜிட்டாண்டஹள்ளி, சோமனஹள்ளி, கோவிலூர், குத்தலஹள்ளி, கம்மாளப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்று வருவதாகவும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு இரவுக்கு பல லட்சம் ரூபாய் சூதாட்டத்தில் புலங்குவதால் காவல்துறையில் முக்கிய உயர் அதிகாரிகளை சரியான முறையில் கவனிக்க படுவதால் இந்த பணம் பறிக்கும் சூதாட்டம் நிகழ்ச்சியை கண்டு கொள்வதில்லை எனவும் சூதாட்டத்தில் பணம், தங்கநகை, இருசக்கர வாகனம், சைக்கிள், வீட்டில் உள்ள விலை உயர்வு பொருட்கள் , தட்டு முட்டு சாமன்கள் உள்ளிட்டவை இழந்து ஏழ்மையான நிலைக்கு தள்ளப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதே நிலை நீடித்தால் விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளிகள் நிலைமை மோசமான நிலைக்கு தள்ளப்படுவது மட்டுமின்றி  கடனாளிகளாகவும்  பல தற்கொலைகள் நிகழ வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே
கிராமபுறங்களிலுள்ள ஏழை, பாமர மக்கள் பணத்தை இழந்து வாழ்க்கையை தொலைத்து வரும் அவலம் நிலைக்கு தள்ளப்படுவதால்  லங்கர் கட்டை சூதாட்டத்தை தமிழக அரசுக்கு தடை விக்கவும் காவல்துறை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!