Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஏர்வாடி மீனவரை எரித்து கொன்ற சம்பவம்: காசிக்கு தப்பிச் சென்ற கோடாங்கி தற்கொலை..

ஏர்வாடி மீனவரை எரித்து கொன்ற சம்பவம்: காசிக்கு தப்பிச் சென்ற கோடாங்கி தற்கொலை..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடியைச் சேர்ந்த மீனவர் குமார், 45. கடந்த வாரம் ராமநாதபுரம் வந்த இவர், வீடு திரும்பாமல் மாயமானார். ராமநாதபுரம் அருகே ஏந்தல் பகுதியில் உயிருடன் எரித்து கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இலங்கையில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை இங்கிருந்து கொண்டு சென்ற கஞ்சாவிற்கு மாற்றாக மர்மக்கும்பல் பெற்றுக்கொண்டனர். இத்தங்கத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் கடத்தல் கும்பல் தங்களுக்குள் பதுக்கினர். இதில் 183 பவுன் தங்க நகை, ரூ.10 லட்சத்தை போலீசார் கைப்பற்றினர். இத் தங்கத்தில் எஞ்சியதை பங்கு பிரிப்பதில் கும்பலுக்குள் தகராறு ஏற்பட்டது. போலீசார் கைப்பற்றிய நகைகள் தவிர, எஞ்சிய நகைகள் குமாரிடம் இருப்பதாக கடத்தல் கும்பலுக்கு தகவல் கிடைத்தது. குமாரிடம் இருந்த நகைகளை அபகரிக்கும் நோக்கில் குமாரை வரவழைத்து, அங்கு ஏற்பட்ட தகராறில் கொலை நடந்தது.

இக்கொலை சம்பவத்தில் 18 பேர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. போலீசாரின் விசாரணையில் வாலாந்தரவை மகேந்திரன், ராமநாதபுரம் காட்டூரணி ராஜேஷ், மொட்டையன்வலசை சுகில்ராம் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகிறோம். ஏர்வாடி கோடாங்கி ராமநாதன் உள்பட 15 பேரை போலீசார் தீவிரமாக தேடினர். இந்நிலையில், போலீசார் தேடுவதை அறிந்த கோடாங்கி ராமநாதன் 43 , வாரணாசிக்கு தப்பினார். அங்கு காசியிலுள்ள நாட்டுக்கோட்டை செட்டியார் ஆசிரமத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!