Home செய்திகள் புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி சுய நிதிப்பிரிவு ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.

புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி சுய நிதிப்பிரிவு ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.

by mohan

திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி சுய நிதிப்பிரிவு ஆண்டுவிழா  சிறப்பாக நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சிசுந்தரம் வரவேற்புரை மற்றும் கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்கள் தலைசிறந்த விளங்க நூலகம் மற்றும் ஆய்வகங்களை பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் முனைவர் பொன்பெரியசாமி தலைமை உரையாற்றினார். மாணவர்கள் அனைவரும் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று சாதனை பெறவேண்டும் என்ற கல்லூரி தலைவர் பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். மேலும் பல்வேறு போட்டிகளில் பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்.பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளர் முனைவர் கோபிநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நேரு நினைவு கல்லூரி தமிழ்நாட்டில் தலைசிறந்த விளங்குவதாகவும், கணினி அறிவியல் மற்றும் தரவு அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் முதன்முதலாக ஆரம்பிக்கபட்டது என்றும் பேசினார். ஒழுக்கத்தில் மாணவர்கள் தலை சிறந்த விளங்குவதாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறியது பணம் எப்போதும் அதன் மதிப்பு இழப்பதில்லை, காரணம் பணம் எப்போது குப்பை தொட்டியை சேர்ந்ததே இல்லை. ஒருவர் 21 ஆண்டுகள் முயற்சி செய்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். அதற்கு அவர் கூறியதாவது ஒவ்வொரு நாளும் முயற்சி செய்து எவரெஸ்ட் சிகரம் அடைந்ததாக கூறினார். ச இதேபோல் மாணவர்கள் அறிவாளிகள், திறமைசாளிகளாக மாற நிறைய உழைக்க வேண்டும். ஒழுக்கம் மற்றும் குணநலன் நன்றாக கடைபிடிக்க வேண்டும். உலகத்தில் நிறைய போட்டிகள் உள்ளது மற்றவர்களை விட அதிகமாக உழைப்பவர்கள் உலகில் தலைசிறந்த தலைவர்கள் வரமுடியும்.மாணவர்கள் போட்டியில் பங்கேற்பது முக்கியம், தோல்வி பற்றி கவலைப்படத்தேவையில்லை, தோல்வி நமக்கு நிறைய பாடங்களை கற்று தருகிறது. ஒரு பத்திரிகையாளர் விவேகானந்தரைப் பார்த்து சிறந்த உடை அணிவது பற்றி கேட்டார் அதற்கு அவர் அமெரிக்காவின் சிறந்த மனிதரை தையல்காரர் முடிவு செய்கிறார், ஆனால் இந்தியாவில் குணநலனே சிறந்த மனிதரை தீர்மானிக்கிறது.தலைசிறந்த மனிதருக்கு நேர நிர்வாகம் மிக முக்கியமான ஒன்றாகவும். இந்தியர்களிடையே பார்த்து அனைத்து நாடுகளும் ஆச்சிரியம் அடைகின்றன. இந்தியா சிறந்த ஆன்மிக நாடாக திகழ்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே உள்ள போட்டியிலும் இந்தியா உலகின் தலைசிறந்த நாடாக முன்னேறி வருகிறதது.இந்தியா வல்லரசாக உறுதிமொழியை கூறினார். நான் இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்ற என்னால் ஆன உதவியை செய்வேன். இந்தியாவே 2030குல் வல்லரசாக மாற்றுவதற்கு உறுதியளிக்கிறேன், இது சத்தியம் என்று மாணவர்களை உறுதிமொழி ஏற்க்க கூறினார்.துணை முதல்வர் முனைவர் குமாரராமன், முன்னாள் முதல்வர் முனைவர் ஜெயப்பிரகாசம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 2600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். ஹரிஷ் மெனுக் நிறுவனம் 420000 கல்வி உதவித்தொகை 84 மாணவர்களுக்கு வழங்கியது. பல போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற இயற்பியல் துறைக்கு சிறந்த பரிசு கோப்பை வழங்கப்பட்டது. மேலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொருளாதார துறை இயக்குனர் முனைவர் மதியழகன் நன்றியுரை வழங்கினார்.

செய்தி: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!