Home செய்திகள் முக கவசத்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை- கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை..

முக கவசத்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை- கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை..

by Askar

முக கவசத்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை- கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை..

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பொது இடங்களில் வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றை மூடிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு சோப்பு மற்றும் கைக்குட்டையே போதுமானதாகும். எனினும், இந்த அவசர நிலையை பயன்படுத்திக் கொண்டு முகக்கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் ஆகியவற்றை பதுக்கி வைப்பதன் மூலம் தட்டுப்பாடு உருவாக்குதல் மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் போன்ற தவறுகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கலெக்டரின் உத்தரவின்பேரில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேற்கொண்டு இது தொடர்பான புகார்களுக்கு (0416) 2252120, 7904144252, 9884839957 ஆகிய எண்களில் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சலில் (மருந்து கட்டுப்பாட்டு துறை, வேலூர் மண்டலம்) தொடர்பு கொள்ளலாம்.

மேலும், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுக்கு மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கக்கூடாது எனவும், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக அறிவுறுத்துமாறும் கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!