தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும்-தமிழக அரசு உத்தரவு..

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும்-தமிழக அரசு உத்தரவு..

தமிழகத்தில் செயல்படும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் வைக்கப்படும் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவரும்/மாற்றப்பட்டு வரும் அபாய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக வட மாநிலத்தவர்களின் குடியேற்றங்கள் மற்றும் அவர்களின் வணிக நிறுவனங்கள் அதிகரித்துள்ளதால் தமிழ் மொழியின் பயன்பாடு குறைந்து வருவதாகவும், ஹிந்தி மொழியின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாகவும் தமிழக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் வணிக நிறுவன பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்ற சட்டவிதிகள் பின்பற்றப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக 1948 தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளிலும் 1959 உணவு நிறுவனங்கள் விதிகளிலும் முறையே 1983 மற்றும் 1984-ஆம் ஆண்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதலில் இருக்க வேண்டும். மற்ற மொழிகள் உபயோகிக்கப்பட்டால், ஆங்கிலம் இரண்டாவதாகவும்,பிற மொழிகள் மூன்றாவதாகவும் இருத்தல் வேண்டும் எனவும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனங்களில் பெயர் பலகைகள் வைத்தல் குறித்த சட்டவிதிகள் சரிவர பின்பற்றப்படவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர் நல ஆணையர் இரா.நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..