Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரம் அருகே கடத்தல் தங்கம் பங்கு பிரிப்பு விவாகரம் உயிருடன் எரித்து கொல்லப்பட்டவர் உடல் தோண்டி எடுப்பு..

இராமநாதபுரம் அருகே கடத்தல் தங்கம் பங்கு பிரிப்பு விவாகரம் உயிருடன் எரித்து கொல்லப்பட்டவர் உடல் தோண்டி எடுப்பு..

by ஆசிரியர்

இலங்கையில் இருந்து தங்கம், தமிழகத்தில் இருந்து கடல் அட்டை, கஞ்சா, ஹொராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் சமீப காலமாக அதிகரித்துள்ளது. கடத்தல் சம்பவங்களை தடுக்க, இலங்கை கடற்படை, இந்திய கடலோர காவல் படை,  உளவுத்துறை உள்ளிட்ட பாதுகாப்பு ஏஜன்ஸிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இக்கண்காணிப்பை, மீறி இராமநாதபுரம் கடலோர பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அடிக்கடி அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இராமநாதபுரம் அருகே ஏர்வாடியைச் மீனவர் குமார், கடந்த சில நாட்களுக்கு முன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலாமல் போனது.

இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் தனிப்பிரிவிற்கு கிடைத்த தகவல்படி, கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையோரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரனையில் இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக இராமநாதபுரத்திற்கு கடத்திய தங்கத்தை பங்கு பிரிப்பதில் கடத்தல் கும்பலுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் ஏர்வாடி குமாரை, ராமநாதபுரம்- பெருங்குளம் இடையே ஏந்தல் கிராமத்தில் வைத்து மண்னெண்னெய் ஊற்றி எரித்து கொள்ளப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில், தடவியல் நிபுணர்கள் குழுவினர் எரித்து புதைக்கப்பட்ட குமாரின் உடலை தோண்டி எடுத்தனர். தோண்டி எடுத்த உடலை மரபணு (டிஎன்ஏ) சோதனைக்கு ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 7 நாளில் இலங்கையில் இருந்து கடத்தி வந்த 19 கிலோ தங்கத்தை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. கடத்தல் தங்கத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட விவகாரத்தில் உயிருடன் ஒருவரை எரித்து கொன்ற சம்பவம், இராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!