Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை தாலுகா ஆபீஸ் கட்ட நிலம் தானம் அளித்த தொழிலதிபருக்கு வருவாய்துறையினர் பாராட்டு..

கீழக்கரை தாலுகா ஆபீஸ் கட்ட நிலம் தானம் அளித்த தொழிலதிபருக்கு வருவாய்துறையினர் பாராட்டு..

by ஆசிரியர்

mஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை தனி தாலுகாவாக தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து, கீழக்கரை நகராட்சி அலுவலக வளாகத்தில் தாலுகா ஆபிஸ் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அரசுக்கு சொந்தமான இடம் தேடினர். போதுமான வசதிகளுடன் கூடிய தாலுகா ஆபீஸ் கட்டுவதற்கு அரசுக்கு சொந்தமான இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் கீழக்கரை துணை மின் நிலையம் அருகே உள்ள தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை தொழிலதிபர் செய்யது சலாஹூதீன் அரசுக்கு தானமாக வழங்க முன் வந்தார்.

இதை மாவட்ட நிர்வாக பரிந்துரையில் அரசு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், அப்போதைய தாசில்தார் கமலா பாய், தொழிலதிபர் செய்யது சலாஹூதீன் 3 ஏக்கர் நில தான ஆவணத்தை வருவாய் துறையினரிடம் வழங்கினார்.

இந்நிலத்தில், வருவாய் துறை சார்பில் ரூ.2.72 கோடி மதிப்பிலான கீழக்கரை தாலுகா அலுவலகம் மற்றும் குடியிருப்பு உட்பட ரூ.5. 87 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 5 கட்டடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 01.3.2020 அன்று திறந்து வைத்தார். புதிய கட்டடத்தில் கீழக்கரை தாலுகா ஆபீஸ் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் முன்னிலையில் 11.3.2020 முதல் செயல்பட உள்ளது. தாலுகா ஆபீஸ் கட்ட ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை தானம் வழங்கிய ஸ்டார் குழுமங்களின் சேர்மன் செய்யது சலாஹூதீனுக்கு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலர் கே.எம். தமிம் ராஜா (முதுகுளத்தூர் தாசில்தார் (ஆதிதிராவிடர் நலம்) பாராட்டு தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!