மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்ததாக கூறி பெட்ரோல் நிலையம் முன் குப்பைத் தொட்டியை வைத்த மாநகராட்சி

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 77 வது வார்டு வசந்த நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பாரத் பெட்ரோல் நிலையத்திற்கு சொந்தமான பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது. இதை ஆதவன்  குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ரூ 3 லட்சம் வரி பாக்கி இருப்பதாகவும் இதை செலுத்தாத காரணத்தினால் இரு குப்பை தொட்டிகளை பெட்ரோல் நிலையம் முன் வைத்துள்ளனா் மாநகராட்சி அதிகாரிகள்.  இதனால் துர்நாற்றமும் அப்பகுதியில் வீசுவதால் பொதுமக்கள் நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .இதுபோன்று வரி செலுத்தாதவர்கள் மீது குப்பைத்தொட்டி வைப்பது சட்டப்படி குற்றம் என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை மீறி மாநகராட்சி அதிகாரிகள் குப்பைத்தொட்டி எப்படி வைத்தார்கள் என்று தெரியவில்லை. மக்களை பாதிக்கும் எந்த செயலையும் மாநகராட்சி அதிகாரிகள்  மேற்கொள்ளக்கூடாது. ஏற்கனவே நாடு முழுவதும் பல்வேறு வியாதிகள் நோய்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் கூடும் இடத்தில் இதுபோன்று அதிக அளவு குப்பைகளுடன் குப்பைத் தொட்டியை வைத்தது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அவர் இருந்தால் நேரடியாக சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் நோட்டீஸ் கொடுத்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் பொது மக்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..