சிவகிரியில் பேராசிரியர் அன்பழகன் மறைவையொட்டி இரங்கல் தெரிவித்து மெளன ஊர்வலம்-திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு..

சிவகிரியில் பேராசிரியர் அன்பழகன் மறைவையொட்டி இரங்கல் தெரிவித்து மெளன ஊர்வலம்-திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு..

தென்காசி மாவட்டம் சிவகிரியில் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவையொட்டி அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வும்,அமைதி ஊர்வலமும் நடைபெற்றது.

இந்நிகழ்வில்,திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் கருப்பு பேட்ஜ் அணிந்து கொடி பிடித்து அமைதி ஊர்வலம் நடைபெற்றது. திமுகவின் மாநில மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் எஸ் அய்யாத்துரை பாண்டியன் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

வாசுதேவநல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் முன்னிலை வகித்தார். சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட துணைச் செயலாளர் கோ மாடசாமி, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் வே மனோகரன், மாவட்ட வழக்கறிஞர் அணியின் புரவலர் மருதப்பன், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் சுமதி, ஒன்றிய துணைச் செயலாளர் மாரி துரை, மாவட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் மெடிக்கல் சுந்தர்,நல்லசிவன்,தகவல் தொழில் நுட்பத்துறை, இலக்கிய அணி முத்துச்சாமி, தொண்டரணி மாரியப்பன், வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் சரவணன், வாசுதேவநல்லூர் ஒன்றிய துணைச் செயலாளர் மாரிதுரை, ஜிஎஸ் மணி, சிவசாமி, கார்த்திக், தேவிபட்டணம் முருகன், ராமநாதபுரம் வன்னியரஜன், ஜெயராமன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட ஓபிசி அணியில் தலைவர் திருஞானம், சிவகிரி தலைவர் அமுது, சண்முகசுந்தரம் சிபிஎம் சார்பில் ராமசுப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செயலாளர் பாலசுப்பிரமணியன், கூட்டுறவு பண்டகசாலையில் தலைவர் ராஜேந்திரன், வேலுச்சாமி, மதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், நகரச் செயலாளர் பரமசிவம், ஓய்வு பெற்ற ஆசிரியர் வைரவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அமைதி பேரணி காந்திஜி கலையரங்கத்தில் இருந்து துவங்கி நான்கு ரத வீதி வழியாகச் சென்று காந்திஜி கலையரங்கத்தில் முடிந்தது. திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வாழ்க்கை சம்பவங்கள் குறித்த நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..