Home செய்திகள் கடையநல்லூரில் மத்திய அரசின் சிஏஏ,என்பிஆர்,என்ஆர்சி சட்டங்களுக்கு எதிராக மாபெரும் பெண்கள் எழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டம்-ஏராளமான பெண்கள் பங்கேற்பு..

கடையநல்லூரில் மத்திய அரசின் சிஏஏ,என்பிஆர்,என்ஆர்சி சட்டங்களுக்கு எதிராக மாபெரும் பெண்கள் எழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டம்-ஏராளமான பெண்கள் பங்கேற்பு..

by Askar

கடையநல்லூரில் மத்திய அரசின் சிஏஏ,என்பிஆர்,என்ஆர்சி சட்டங்களுக்கு எதிராக மாபெரும் பெண்கள் எழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டம்-ஏராளமான பெண்கள் பங்கேற்பு..

மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட கருப்பு சட்டங்களுக்கு எதிராகவும், தமிழக சட்ட மன்றத்தில் CAA மற்றும் NRC க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், NPR கணக்கெடுப்பை நிறுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மாபெரும் பெண்கள் எழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக பெண்கள் பேரணியை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில செயலாளர் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார். அதை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்டின் மாநில பொருளாளர் மஹதியா,விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட்டின் மாநில துணைத் தலைவர்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மண்டல தலைவர் திப்பு சுல்தான் கண்டன உரை நிகழ்த்தினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்துள்ள அரசியல் சாசன விரோத குடியுரிமை திருத்த சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றிக்கு எதிராக கோடிக்கணக்கான மக்கள் 80 நாட்களுக்கும் மேலாக போராடி வருவதையும், மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை வழங்க பா.ஜ.க. கொண்டு வந்துள்ள இந்த திட்டங்கள் முஸ்லிம்களை முதன்மையாக குறி வைத்தாலும், நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களை பாதிக்கும் என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். மக்கள் போராட்டங்களுக்கு செவி மடுத்து ஐந்திற்கும் அதிகமான மாநில சட்ட மன்றங்களில் CAAவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேறியுள்ளது என்பதையும், பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் கூட தங்கள் மாநிலங்களில் NRCயை நடைமுறை படுத்த மாட்டோம் என்று அறிவித்து உள்ளதையும், அதே போன்று தமிழக அரசும் மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து CAA மற்றும் NRCக்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் சித்திக்கா தலைமையேற்று நடத்தினார். வருகை தந்த அனைவரையும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்ட செயலாளர் நஸிரா வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு SDPI கட்சியின் மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி, நகர ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மௌலவி செய்யது இப்ராஹிம், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் லுக்மான் ஹக்கீம், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹக்கீம், SDPI கட்சியின் நகர தலைவர் யாசர்கான் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹக்கீம் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நகர தலைவர் இஸ்மாயில் பீவி நன்றியுரையுடன் இனிதே நிறைவுபெற்றது.

மேலும் பேரணி மற்றும் பொதுகூட்டத்தில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!