Home செய்திகள் திண்டுக்கல் சிறுமலை வாழைப்பழத்திற்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

திண்டுக்கல் சிறுமலை வாழைப்பழத்திற்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

by Askar

திண்டுக்கல் சிறுமலை வாழைப்பழத்திற்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சிறுமலை மூலிகை செடிகள் நிறைந்த மலைப் பகுதியாகும். மூலிகை வளங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதன் காரணமாக சஞ்சீவி மலை எனவும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த மலையில் வாழை, பலா, சவ்சவ் , எலுமிச்சை உள்ளிட்ட விவசாயம் அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக சிறுமலையில் விளையும் வாழைப்பழம் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது. இந்த வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடும் கடந்த 2008 ஆம் ஆண்டு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கஜா புயல் மற்றும் நோய் தாக்குதல் காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வாழை பாதிக்கப்பட்டது. தற்பொழுது சுமார் 2000 ஏக்கரிலா மட்டுமே வாழை விவசாயம் நடந்து வருகிறது. இருந்தபோதிலும் சிறுமலை வாழைப்பழத்திற்கு போதிய விலை கிடைக்கவில்லை. இந்நிலையில் சிறுமலையில் நடந்த வாழை விவசாயிகள் சங்க கூட்டத்தில் சிறுமலை வாழையை சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளிமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது, சிறுமலையில் சுமார் 16 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் நடந்து வந்தது. தற்போது இது 2000 ஏக்கராக குறைந்துவிட்டது. 5000 விவசாயிகள் இந்த விவசாயத்தை நம்பி உள்ளனர் அழிந்து வரும் சிறுமலை வாழை வரும் காலங்களில் காப்பாற்றுவதற்கு திருச்சியில் உள்ள வாழை ஆராய்ச்சி மையம் எங்களுக்கு உதவ வேண்டும் மேலும் பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் தயாரிப்பிற்கு சிறுமலை வாழைப் பழங்கள் வழங்கப்பட்டு வந்தது ஆனால் இப்போது முற்றிலும் கொள்முதல் நிறுத்தப் பட்டுவிட்டது.மீண்டும் சிறுமலை வாழை பழனி தேவஸ்தானம் கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புவிசார் குறியீடு பெற்ற பின்னரும் திருமலைக்கு போதிய விலை கிடைக்கவில்லை எனவே மாநில அரசு நல்ல விலை கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே சாயிகள் சார்பில் கோரிக்கை விடுத்தார். மேலும் சிறு மலை வாழையை கண்டறிய qr பார் கோடுகளுடன் இனி வரும் காலங்களில் சந்தைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் வேளாண் இணை இயக்குனர் மனோகரன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் கனி, சிறுமலை விவசாயிகள் வாழை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் டாக்டர் மற்றும் கெளதம் ஞானவேல் உள்பட 50-க்கும் மேற்பட்ட வாழை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!