Home செய்திகள்உலக செய்திகள் “வாசிப்பே சுவாசிப்பு”.. ஜித்தா தனியார் நிறுவனம் சார்பாக நூலகம் திறப்பு..

“வாசிப்பே சுவாசிப்பு”.. ஜித்தா தனியார் நிறுவனம் சார்பாக நூலகம் திறப்பு..

by ஆசிரியர்

நவீன உலகில் எத்தனை வகையான புதுமைகள் படிப்பதற்காக வந்தாலும், இறுதி வரை எழுத்துக்கு சாட்சியாக பகருவது அச்சு புத்தகங்கள் மட்டுமே. புத்தகத்தை கையில் எடுத்து வாசிக்கும் பழக்கத்தில் இருக்கும் திருப்தி எதிலும் ஏற்படாது.

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் சவுதி அரேபியா ஜித்தாவில் அமைந்திருக்கும் அல் ஃபனியா எனும் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பயனடையும் வகையில் பணிபுரிபவர்கள் தங்கும் இடத்தில் அனைத்து வசதியுடன் நூலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தை அந்நிறுவனத்தின் மண்டல இயக்குநர் சதக்குத்துல்லாஹ் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பணிபுரியும் பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!