Home செய்திகள் மகளிர் தினம், நேரு நினைவு கல்லூரியில் மகளிர் சிறப்பு என்ன?

மகளிர் தினம், நேரு நினைவு கல்லூரியில் மகளிர் சிறப்பு என்ன?

by mohan

வருகிற மார்ச் 8 உலக மகளிர் தினம் கொண்டாட படுகிறது. புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் உயர்கல்வியில் மகளிர்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மூன்றில் இரண்டு பங்கு மாணவிகள் படிக்கின்றனர். பணிபுரியும் பேராசிரியர்களின் மூன்றில் இரண்டு பங்கு ஆசிரியைகள் பணிபுரிகின்றனர், குறிப்பாக ஆராய்ச்சித் துறையில் பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர். 1983 ஆம் ஆண்டு கணினி ஆய்வகத்தின் திறந்து வைத்து உரையாற்றிய பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பெரியாயியும் கணினி பயில்கிறாள் என்று உரையாற்றினார்.

அவரது கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக கடந்த 35 ஆண்டுகளில் உலகம் முழுவதுமாக இக்கல்லூரியில் பெண்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி சிறப்பு செய்து வருகின்றனர்.மகளிர் கல்விக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் பரந்து விரிந்த மகளிர் விடுதிகள், மகளிருக்காக தனியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான கிராமப்புற பெற்றோர்கள் எதிர்பார்க்கிற மகளிர் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான உரிய இடமாக நேரு நினைவுக் கல்லூரி திகழ்கிறது.இதனை மெய்ப்பிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் மகளிர் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக நடைபெற்றுவருகின்றன குறிப்பாக மகளிருக்கான ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மிகச் சமீபமாக இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் “அறிவியலில் மகளிர் 2020” என்ற மையக்கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக இயற்பியல் ஆராய்ச்சி துறையின் சார்பாக தேசிய அறிவியல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பத்து மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.கணிதவியலில் முனைவர் பட்டம் பயிலும் நித்யா என்ற ஆராய்ச்சி மாணவி 600க்கும் மேற்பட்ட மாணவிகள் முன்னிலையில் பிற மாணவிகளும் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்றும், பெண்கள் ஆராய்ச்சியில் ஈடுபட மிகச் சாதகமான பாதுகாப்பான கல்வி கேந்திரம் நமது நேரு நினைவுக் கல்லூரி என்றும் தனது அனுபவங்களை மாணவி பகிர்ந்து கொண்டார். பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பெரும்பான்மையான மாணவிகள் பங்கேற்று பல பரிசுகளை குவிக்கின்றனர். சமீபத்தில் இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் நாமக்கல் நேரு யுவகேந்திரா அமைப்புடன் நடத்தப்பட்ட சிலம்பாட்டப் போட்டியில் நமது கல்லூரி மாணவி சத்யபிரியா முதலிடம் பெற்று சிறப்பு செய்தார். மகளிர்கான சுய தொழில் பயிற்சி ஆக சோப்பு தயாரித்தல் ஷாம்பு தயாரித்தல் சலவை சோப்பு தயாரித்தல் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டிற்காக பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.தேசிய அளவில் நடத்தப்படுகின்ற தேசிய திறனாய்வு போட்டியில் டிஎஸ் கீர்த்தனா மற்றும் மஞ்சுளா இரண்டு மாணவிகள் தேசிய அளவில் முன்னிலை பெற்று பரிசு பெற்றனர்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!