முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தின நிகழ்ச்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தின நிகழ்ச்சி இன்று (06/03/2020) மாலை 03.00 மணியளவில் நடைப்பெற்றது.

இவ்விழாவிற்கு முகம்மது சதக் நிறுவாகத் தலைவர் S.M.முகம்மது யூசுப், செயலாளர் S.M.H சர்மிளா, இயக்குனர் P.R.L.S ஹமீது இப்ராகீம் ஆகயோர் மகளிர் தின விழாவிற்கு வாழ்த்தினார்கள்.

அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr.A.R. நாதிரா பானு கமால் மாணவிகளிடம் நல்ல கல்வி நல்ல வேலையை, நற் ஒழுக்கத்தை பெற்று தரும் என்றும் சிறப்பு விருந்தினரின் சிறப்பையும் கூறி தலைமையுரை ஆற்றினார். முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் Dr.(H)M. இராஜ முத்து, நேஷனல் அகதொமி மேல்நிலைப்பள்ளி முதல்வர், இராமநாதபுரம் அவர்கள் மாணவிகளிடம் சமுதாயம் சிறப்பாக இருக்க பெண் கல்வி, ஒழுக்கம் அவசியம் என்றும் நம்மை நாமே காப்பாற்றும் திறமை வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். திரு.S.மதுக்குமார், வேலைவாயப்பு அதிகாரி இராமநாதபுரம் அவர்கள் மகளிர் தினத்தின் சிறப்பையும் பெண்களுக்கான வேலைவாய்ப்பையும் எடுத்துரைத்தார். பெண்களின் சிறப்பை மாணவிகள் மௌன நாடகம், பாடல் மூலமாக எடுத்துரைத்தார். இந்நிகழ்வை கல்லூரி தகவல் நுட்பத் துறை பேராசிரியர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..