Home செய்திகள் ரோட்டரி சார்பில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம் ராமநாதபுரம் வருகை: டிஐஜி., வரவேற்பு

ரோட்டரி சார்பில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம் ராமநாதபுரம் வருகை: டிஐஜி., வரவேற்பு

by mohan

போலியோவை உலகை விட்டு ஒழிக்க ரோட்டரியின் பங்கு மகத்தானது. போலியோ சொட்டு மருந்திற்கான செலவை கடந்த 30 ஆண்டுகளாக ரோட்டரி ஏற்றுக் கொண்டு உள்ளது. போலியோ ஒழிப்பிற்கு 1,800 மில்லியன் அமெரிக்க டாலர் சர்வதேச ரோட்டரி இதுவரை செலவு செய்துள்ளது. நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தவிர மற்ற நாடுகளில் போலியோ ஒழிக்கப்பட்டு விட்டது. நம் அண்டை நாடுகளில் போலியோ இருப்பதால் நமக்கும் அது மீண்டும் வர வாய்ப்புகள் அதிகம். எனவே, போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இரண்டு வாகனங்கள் மேற்கு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக பிப்.23 ல் புறப்பட்டன. அந்த வாகனங்கள் நூறு நாள் விழிப்புணர்வு பிரசாரத்திற்கு பிறகு காஷ்மீரில் இருந்து கராச்சிக்கு ஒன்று, காபூலுக்கு ஒன்று நன்கொடையாக வழங்கப்பட உள்ளது. இன்று மாலை ராமநாதபுரம், வந்த இந்த விழிப்புணர்வு வாகனத்தை ராமநாதபுரம் அரண்மனை முன் ராமநாதபுரம் டிஐஜி., ரூபேஷ் குமார் மீனா, ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா கலந்து கொண்டு வரவேற்றனர். இதில் ரோட்டரி ஒருங்கிணைப்பாளர் ஜெ.தினேஷ் பாபு, முன்னாள் துணை ஆளுநர்கள் ஜெ.சுகுமாறன், பார்த்த சாரதி, பி.ஆர்.என்.முத்துராமலிங்கம், ராமநாதபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் நாகராஜன், உறுப்பினர்கள் செங்குட்டுவன், அருண். இன்ஜினியர் பாலா, அண்ணாதுரை, வழக்கறிஞர் ஜகத் இளவரசன், ராதாகிருஷ்ணன், கீழக்கரை ரோட்டரி நிர்வாகி பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!