Home செய்திகள்கீழக்கரை செய்திகள் “வாசிப்பே சுவாசிப்பு”.. புத்தக வாசிப்பின் பழக்கதை அழிவின் விளிம்பிருந்து காக்க முயற்சி எடுத்த கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தினர்…

“வாசிப்பே சுவாசிப்பு”.. புத்தக வாசிப்பின் பழக்கதை அழிவின் விளிம்பிருந்து காக்க முயற்சி எடுத்த கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தினர்…

by ஆசிரியர்

நவீன யுகம், டிஜிடல் மயம், அவசர உலகம் என்ற பரபரப்பில் புத்தகம் வாசித்தல் என்ற பழக்கமே மறைந்து விடுமோ என்ற சூழலில் அங்கும், இங்குமாக வருடம்தோறும் புத்தக கண்காட்சிகளே மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விசயம். கீழக்கரை போன்ற ஊர்களில் மிகவும் பரபரப்பாக இருந்த அரசு நூலகங்கள் கூட குறுகி சிறிய அறையில் மூடையில் புத்தகங்களை கட்டி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தினர் வாசிப்பு பழக்கத்தை ஊக்கவிக்கும் வண்ணம் இன்று (05/03/2020) தபால் நிலைய சாலையில் அருகில் “ஹிதாயத் நூலகம்” என்ற பெயரில் பொது மக்கள் நலன் கருதி தொடங்கியுள்ளனர்.

இந்நூலக திறப்பு விழாவில் ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் துணை செயலாளர் வாசிம் அக்ரம் வரவேற்புரை வழங்கினர். Fashion Scope இஸ்மாயில் நூலகத்தை திறந்து வைத்து வரவேற்புரையாற்றினார். ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் ரைசுல் இஸ்லாம் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!