உலக வன உயிரின நாள் (மார்ச்.3 ) ஒரு யானை அழிந்தால் 16 வகை தாவரங்கள் அழியும் ஒர் எச்சரிக்கை தொகுப்பு..

 உலக வன உயிரின நாள் (மார்ச்.3 ) ஒரு யானை அழிந்தால் 16 வகை தாவரங்கள் அழியும் ஒர் எச்சரிக்கை தொகுப்பு..

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள், மார்ச் 3-ம் தேதியை சர்வதேச வன உயிரின நாளாகக் கொண்டாடுகின்றன. வன விலங்குகள், வனத்தில் உள்ள முக்கிய தாவரங்களைப் பாதுகாக்க வும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வதே இந்த நாளைக் கொண்டாடு வதன் நோக்கம். இந்த ஆண்டு உலக வன உயிரின நாளில், ‘வன விலங்கு களை வேட்டையாடுவது மிகக் கொடூரம்’ என்ற கருத்தை மக்களி டையே பரப்ப வனத்துறை முடிவு செய்துள்ளது. ‘வனம் மற்றும் வன விலங்கு பாதுகாப்பில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்’ என ஐ.நா., சபை அறைகூவல் விடுத்துள்ளது. இயற்கை சமநிலை ஒரு சிற்றினம் அழியும் போது அல்லது, அதன் எண்ணிக்கை குறையும் போது பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதற்கு காரணம் உணவு சங்கிலியும், உணவு வலையும் பெரிய அளவில் பாதிக்கப்படுவதே ஆகும். சூழல் சமநிலையை நிலைபெற செய்ய, வனவுயிரினங்களையும், அதன் சூழல் அமைப்பையும் பாதுகாக்க வேண்டும். ஒரு யானை அழிந்தால், அதனைச் சுற்றியுள்ள காட்டில் 16 வகை தாவரங்கள் அழிந்து விடும் என மார்ச் 3-ம் தேதி (இன்று) சர்வதேச வன உயிரின நாளில் வன விலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். உலகில் உள்ள வன உயிரினங்களில் 6.5 சதவீதம் வன விலங்குகள் இந்தியாவில் உள்ளன. இங்குதான் நிலத்திலும், நீரிலும் வாழக்கூடிய உயிரினங்கள் அதிகம் உள்ளன. தற்போது வனவிலங்குகளை மனிதனின் பல்வேறு தேவைகளுக்காக வேட்டையாடுவதால், அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதில் மனிதனுக்கு வரக் கூடிய சில நோய்களை, வனவிலங்கு களுடைய ரத்தம், உடல் பாகங்கள் குணமாக்கும் என்ற கண்மூடித்தனமான மூடநம்பிக்கை யால் பெரும் பணக்காரர்கள், விலங்குகளின் உடல் பாகங்கள், ரத்தத்தை எவ்வளவு விலை கொடுத் தும் வாங்க தயாராக உள்ளனர்.

அதனால், சர்வதேச சந்தை யில் வன விலங்குகளின் உடல் பாகங்களுக்கு ஏற்பட்ட கிராக்கி யால், இயற்கையில் மதிப்புமிக்க வன விலங்குகளை வேட்டைக் கும்பல் வேட்டையாடுகின்றன.

இந்தியாவில் புலி, காண்டா மிருகங்கள், நட்சத்திர ஆமைகள் தான் அதிக அளவு வேட்டையாடப் படுகின்றன. வாழ்வியல் சூழலில் மரபணு, சமூக, பொருளாதார, பொழுதுபோக்கு, அறிவியல் மற்றும் கலாச்சார, பண்பாட்டில் மனிதனுடன் வனவிலங்குகளுக்கு தொடர்பு இருக்கிறது. வனவிலங்கு கள் வசிக்கும் காடுகளை கொண்ட நாடுகளே, சிறந்த நாடு என அறியப்படுகிறது. அதனால், வன விலங்குகளை பாது காப்பது அவசியமாகிறது. வன விலங்குகளை நேரடியாகப் பார்த்தால் அவற்றை தொந்தரவு செய்யாமல் ரசிக்க வேண்டும். அதை சீண்டிப் பார்க்கக்கூடாது. வன விலங்குகள் காட்டை விட்டு வெளியேறும்பட்சத்தில், அதனை மீண்டும் பாதுகாப்பாக காட்டில் கொண்டுபோய் விட வேண்டும்.

தேசிய வனவிலங்கு கொள்கைப் படி, மொத்த காடுகளில் 28 சதவீதம் பகுதியை, வன விலங்குகளுக்காக பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் உள்ள காடுகள் பரப்பளவில் 28 சதவீதம் வன விலங்கு சரணாலயமாகவும், தேசிய பூங்காக்களாகவும் அறிவிக்கப் பட்டுள்ளன. இரு நூற்றாண்டுகளில் 300 வகையான பறவைகள் மாயமாகியுள்ளன. வனவிலங்குகளின் அழிவு காடுகளை மட்டும் பாதிப்பதில்லை. மனிதனையும் பாதிக்கிறது. ஒரு காட்டில் புலி வசித்தால், அதனை சுற்றியுள்ள வன விலங்குகள், மரங்கள் மற்றும் மனிதர்கள் வாழ்வார்கள். ஒரு யானை அழிந்தால், அதனைச் சுற்றியுள்ள காடுகளில் 16 வகையான முக்கிய தாவரங்கள் அழிந்து போகும்.

மனித செயல்பாடுகளால் அதிகம் பாதிக்கப்படுகின்ற இடமாக கடலே இருக்கின்றது. உலகின் எந்த மூலையில் தூக்கி வீசப்படுகின்ற கழிவும் கடைசியில் சென்று சேருகின்ற இடம் கடல்தான். கடல் என்பது தண்ணீர் மட்டும் அல்ல, கடல் என்பது உயிர். மிகச் சிறிய கடல்வாழ் நுண்ணுயிர்கள் தொடங்கி மிகப்பெரிய திமிங்கலம் வரை பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழும் இடம். கடலை நீல நிறக் காடு என்று கூறலாம். அதில், நமது கடல்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. மனிதர்களின் தோற்றத்திற்கும் பல மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்னரே நீருக்கு அடியில் உயிர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றன. ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் மனிதர்கள் இந்த கடல் உயிர் சூழலை பெரும் ஆபத்துக்கு உள்ளாக்கி விட்டோம். கடல் நாம் சுவாசிக்க காற்றினை சுத்தப்படுத்தி தருகிறது. சுமார் 70 சதவீத ஆக்ஸிஜன் கடலால்தான் கிடைக்கின்றது. மனிதர்களுக்கு உணவினைத் தருகின்றது, பருவ நிலையினை சீராக்குகிறது, பல லட்சம் மனிதர்களுக்கு வாழ்வளிக்கிறது. ஆனால், நாம் பதிலுக்கு என்ன செய்து இருக்கின்றோம். உலகின் பல இடங்களில் சரிசெய்யவே இயலாத அளவுக்கு கடல் பாதிப்பு அடைந்து இருக்கின்றது. கடந்த 45 வருடங்களில் புவியில் வாழ்ந்த பாதி அளவுக்கும் அதிகமான வன உயிர்களை நாம் தொலைத்து இருக்கின்றோம். நம் அனைவருக்கும் இதனை புரிந்து கொள்ள வலிமை உள்ளது, அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டிய கடமையும் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வனவளம் மிகவும் முக்கியமானதாகும். மரங்கள் நம் வாழ்வோடும், கலாச்சாரத்தோடும் இணைந்துள்ளன. காங்கோ மற்றும் அமேசான் போன்ற வெப்ப மண்டலக் காடுகளில் மழை அதிகமாகப் பெய்யக் காரணம் அங்கு மரங்கள் நிறைந்திருப்பது தான். இன்று பெருமளவில் வனங்கள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டுவிட்டதால் பருவமழை தவற ஆரம்பித்துவிட்டது. ஒரு நாட்டின் நிலப்பரப்பின் 33 % மாவது காடுகளிருக்க வேண்டும். நம்மிடம் இருப்பதோ 20% காடுகள்தான். அடைய வேண்டிய இலக்கு வெகு தொலைவில் உள்ளது. எனவே சாலைகள், தொழிற்சாலைகள், கட்டிடங்கள், விவசாயம், என மனிதகுல வளர்ச்சிப் பணிகளையும் காடுகளற்ற சமவெளிப் பகுதிகளில் விரிவுபடுத்துவோம். மிச்சமுள்ள காடுகளுக்கு சிறு அழிவும் ஏற்படாமல் காத்து நிற்போம். இதுவே இனிவரும் தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து. நாட்டின் வேலியாய் விளங்கும் காடுகளையும், விலங்குகளையும் காப்பது குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை கருத்தில் கொண்டு இளைஞர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..