Home செய்திகள் கொடைரோட்டில் இருசக்கர வாகனம் வாடகைக்கு விடும் அலுவலகத்தை கொடைரோடு ரயில் நிலைய டாக்ஸி ஓட்டுனர்கள் முற்றுகை பரபரப்பு

கொடைரோட்டில் இருசக்கர வாகனம் வாடகைக்கு விடும் அலுவலகத்தை கொடைரோடு ரயில் நிலைய டாக்ஸி ஓட்டுனர்கள் முற்றுகை பரபரப்பு

by mohan

  திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடுரயில் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் கொடைக்கானல், குமுளி, கம்பம், சுருளி மூணாறு போன்ற சுற்றுலா தலங்களுக்காகவே ஏற்படுத்தப்பட்ட மிகவும் பாரம்பரியமிக்க பழமையான ரயில் நிலையம்.இந்த ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து வகையான வாடகை வாகனங்கள் உள்ளன இதனையே வாழ்வாதாரமாக நம்பி 150-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் உரிமையாளர்கள் உள்ளனர் இந்நிலையில் சமீபகாலமாக கொடைரோடு ரயில் நிலையம் எதிரே ரெண்ட்-பைக் என்ற இருசக்கர வாகனத்தை வாடகைக்கு விடும் அலுவலகத்தை திறந்து பைக்குகளை வாடகைக்கு விட்டுவருவதால் இரயில் நிலைய வாடகை கார் ஓட்டுனர்கள் வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக கூறி இன்று அந்நிறுவனத்தை ஐம்பதுக்கு மேற்பட்ட இரயில் நிலைய அனைத்து வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களும் தலைவர் ஆசைத்தம்பி தலைமையில் ஒன்றுகூடி ரெண்ட்-பைக் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் செயலாளர் அன்பு பொருளாளர் அருண்குமார் நிர்வாகி தினேஷ் உட்பட 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

தகவலறிந்த வந்த அம்மையநாயக்கனூர் போலீசார் நேரில் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்  வாடகை கார் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் கோரிக்கைக்கு தக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித் |தை தொடர்ந்து போராட்டகாரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து வாடகை கார் உரிமையாளரும் ஓட்டுனருமான சரவணக்குமார் கூறுகையில் இந்த நிறுவனத்தினர் ஸ்கூட்டி முதல் புல்லட் வரைவிதவிதமான15-ற்கும் மேற்பட்ட வாகனங்களை வாடகைக்கு விட்டு வருகின்றனர் சில இரு சக்கர வாகனங்களில் முறைகேடாக வக்கில், பிரஸ் போன்ற  ஸ்டிக்கர்கள் ஒட்டியும் உள்ளனர் மேலும் வடமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஆன்லைன் மூலமாக ஆசை வார்த்தைகள் கூறி புக் செய்து விடுகின்றனர் இதனால் சமீப காலமாக எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு  கேள் விக்குறியாக உள்ளது இந்நிலையில் நிறுவனத்தினர் எந்தவிதமான உரிமமும்பெறாமல் முறைகேடாக இயங்கி வருவதாக தெரியவருகிறது மேலும் இவ்வாறான நிறுவனங்கள் அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் சுற்றளவில் அனுமதிக்கப்படுவர் ஆனால் இவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட மதுரை திண்டுக்கல் சிறுமலை கொடைக்கானல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு இந்த வாடகை இரு சக்கரவாகனங்களை அனுமதிக்கின்றனர் அவர்களுக்கும் முறையான ஓட்டுனர் உரிமமும் ஆவணங்கள் இருப்பதில்லை இதனால் பல்வேறு இடங்களில் பல பிரச்சனைகள்அடிக்கடி ஏற்படுகிறதுஎன்றார்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!