மரங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயணம்

விதை தூவும் பறவைகள் அமைப்பாளர் க.அசோக்குமார் இளைய தலைமுறையினரிடம் மரங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயனத்தில் ஈடுபட்டார்.இந்த விழிப்புணர்வு பயனத்தை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தேசிய கொடியை வழங்கி ஊக்கப்படுத்தி துவங்கி வைத்தார்.இதில் சமூக ஆர்வலர்கள் மாயகிருஷ்ணன், , மஸ்தான், கிரேஸியஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினர்.

இதற்காக மதுரை முதல் R.S.மங்களம் (இராமநாதபுரம் மாவட்டம்) வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார்.வழிநெடுகிலும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர் சிறுமியரை சந்தித்து மரங்கள் இல்லாத நிலை ஏற்பட்டால் எதிர்காலத்தில் மனிதர்கள் செயற்கை சுவாச சிலிண்டருடன் நடமாடும் நிலை ஏற்பட்டும் என்று அதற்கான செயல்முறை காட்டி விளக்கினார்.வழியில் பல்வேறு இடங்களில் சிறுவர்கள் இவரிடம் ஆர்வமாக தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர்.தொடர்ந்து மதுரையில் பல்வேறு பள்ளிகளில் இதை கொண்டு செல்ல உள்ளதாக அசோக்குமார் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..