செங்கம் வாம் தொண்டு நிறுவனத்தில் பெண்குழந்தைகள் பாதுகாப்பு தின விழா அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கடன் உதவி வழங்கினார்..

செங்கம் வாம் தொண்டு நிறுவனத்தில் பெண்குழந்தைகள் பாதுகாப்பு தின விழா அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கடன் உதவி வழங்கினார்..

செங்கம் அடுத்த முறையாறு வாம் தொண்டு நிறுவனத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த தினம் தமிழக அரசின் அறிவிப்பு படி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழாவாக நடைபெற்றது நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்ட இணைசெயலாளர் அமுதா அருணாச்சலம் தலைமைதாங்கினார். வாம் நிர்வாகி ராஜவேலு வரவேற்றுபேசினார். விழாவில் தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கலந்துகொண்டு மகளிர் சுயஉதவிகுழு பெண்களுக்கு ரூ.15லட்சம் கடன் உதவி முதியோர்களுக்கு இலவச வேட்டிசேலை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் மற்றும் அருசுவை உணவு வழங்கி பேசினார் .அப்போது இந்த தொண்டு நிறுவனம் 1983ல் தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. 55முதியவர்கள் 80 ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர் 40ஆயிரம் மகளிர் குழு பெண்கள் வழிநடத்தப்படுகின்றனர் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என வாழ்ந்து மறைந்த தமிழக முதல்வர் அம்மாவின் பிறந்ததினம் பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட தமிழக அரசு அறிவித்துள்ளது அதன் அடிப்படையில் இன்று இந்த தொண்டு நிறுவனத்தில் நலதிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன என்றைக்கும் மக்கள் அம்மாவின் அரசுக்கு ஆதரவு உள்ளவர்களாக இருக்கவேண்டும் என அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பேசினார் விழாவில் முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எஸ்.ராமசந்திரன் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இ.என்.நாராயணன் தண்டராம்பட்டு ஒன்றிய செயலாளர் ராஜா என்கிற தேவராஜன் தலைமைகழக பேச்சாளர் வெங்கட்ராமன் கூட்டுறவு சங்க தலைவர்கள் வளையாம்பட்டு சங்கர் ஜெயபிரகாஷ் நகர பேரவை செயலாளர் குமார் நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எ.ஜி.ராஜா மகரிஷி பள்ளி தலைவர் மனோகரன் கூட்டுறவு சங்க துணைத்தலைவர்கள் கோபி முரளிதரன் ஒன்றிய கவுன்சிலர்கள் பென்னாத்தூர் முருகன் கொட்டகுளம் ராஜன் அரசு ஒப்பந்ததாரர் சங்கர் மாதவன் ஊராட்சி செயலாளர் புதுப்பட்டு தனஞ்செயன் முன்னாள் பேரூராட்சி தலைவர் பத்மாமுனிகண்ணு மாவட்ட பேரவை துணைத்தலைவர் பன்னீர் நகர செயலாளர் ஆனந்தன் உட்பட பலர் கலந்துகொண்னடர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image