இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 7 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா 529 பேருக்கு பட்டம்

இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 7 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யது அம்மாள் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா (அறக்கட்டளை கவுரவ உறுப்பினர்) முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் அமானுல்லா ஹமீது வரவேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலை., அளவில் தர வரிசைப் பட்டியலில் இடம் பிடித்த 35 மாணவ, மாணவியர் பி.புவனா ஸ்ரீ முதலிடம் (பி.ஏ., தமிழ் இலக்கியம்), ஆலம் ஆதிலா 8 ஆம் இடம் (பி.ஏ., தமிழ் இலக்கியம் ), கே.சுஸ்மிதா முதலிடம் (பி.ஏ., ஆங்கில இலக்கியம்), எம்.நூர் நிலோபர் நிஷா 6 ஆம் இடம் (பி.ஏ., ஆங்கில இலக்கியம்), எஸ்.அஸ்லினா ஜூஹி ரசூல் 10 ஆம் இடம் (பி.ஏ., ஆங்கில இலக்கியம்), பாஜிலா பானு 10 ஆம் இடம் (பி.ஏ., ஆங்கில இலக்கியம்), டி.உமா மகேஸ்வரி 5ஆம் இடம் (பிஎஸ்சி,. கணிதம்), எம். விக்னேஷ்வரன் 6ஆம் இடம் (பி.எஸ்சி கணிதம்), எஸ்.சமிம் பர்வீன் 3 ஆம் இடம் (பி.எஸ்சி இயற்பியல்), வி.அனிதா 10 ஆம் இடம் (பி.எஸ்சி இயற்பியல்), பி.கோகிலவாணி 3ஆம் இடம் (பிசிஏ), எஸ்.மஜிதா 7 ஆம் இடம்(பிசிஏ), ஏ.நூருல் பாயிஷா 10 ஆம் இடம் (பிசிஏ), சாதனா ஸ்ரீ 8 ஆம் இடம் (பி.எஸ்சி வேதியியல்), எஸ்.ஹசினா சித்திகா 9 ஆம் இடம் (பி.எஸ்சி வேதியியல்), எஸ்.ஜென்னத்துல் ரசினா 2 ஆம் இடம் (எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்), எஸ்.தஸ்லீம் ராணி 7 ஆம் இடம் ((எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்), ஏ. மெஹ்ருன் நபாஷா 8 ஆம் இடம் (எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்), ஆர்.கௌசல்யா 2ஆம் இடம் (எம்ஏ ஆங்கில இலக்கியம்), ஏ. உம்மு ஷமினா ராணி 5 ஆம் இடம் (எம்ஏ ஆங்கில இலக்கியம்), ஜெ.சுபலட்சுமி 8 ஆம் இடம் (எம்ஏ ஆங்கில இலக்கியம்), எம்.ஆனந்தி 2 ஆம் இடம் (பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்), எச்.தீனுல் பாத்திமா 2ஆம் இடம் (பி.எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி), ஏ.பஸ்னா 3 ஆம் இடம் (பி.எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி), எம்.மஹாலட்சுமி 5 ஆம் இடம் (பி.எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி), ஏ.ரஸ்மியா பானு 7 ஆம் இடம் (பி.எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி), ஆர்.யோகலட்சுமி முதலாம் இடம் (பி.எஸ்சி மைக்ரோ பயாலஜி), எம்.சப்ரின் மின்ஹா இரண்டாம் இடம் (பி.எஸ்சி மைக்ரோ பயாலஜி), ஆர்.ரிஹானா ரஹ்மான் 3 ஆம் இடம் (பி.எஸ்சி மைக்ரோ பயாலஜி), எஸ்.ரிஸ்வானா பர்வின் ஆறாம் இடம் (பி.எஸ்சி மைக்ரோ பயாலஜி), என்.திருக்குமரி 3 ஆம் இடம் (பி.எஸ்சி விலங்கியல்), ஜெ.நாகநந்தினி 10 ஆம் இடம் (பி.காம் சிஏ), கே.அகிலா 3 ஆம் இடம்
( எம்.காம் சிஏ), ஜெ.முஹையதீன் பாஹிர் ஆறாம் இடம் ( எம்.காம் சிஏ), எம்.மஞ்சு 9 ஆம் இடம் ( எம்.காம் சிஏ) ஆகியோர் உள்பட 38 மாணாக்கருக்கு முதுகலை பட்டங்கள், 491 மாணாக்கருக்கு இளங்கலை, இளமறிவியல் பட்டங்களை மதுரை காமராஜ் பல்கலை., துணை வேந்தர் எம்.கிருஷ்ணன் வழங்கினார்.அவர் பேசியதாவது:

வேலை வாய்ப்பின்மை பிரச்னை அதிகரிப்பிற்கு நாட்டில் நிலவும் லஞ்சமே பிரதானமாக உள்ளது. கல்வி அறிவு பெற்று விட்டால் வேலை கிடைத்து விடாது. இன்றைய அபரித வளர்ச்சி அடைந்த தகவல் தொழில் நுட்ப உலகில் தனித்திறமை வளர்த்து கொண்டால் மட்டுமே வேலை வாய்ப்பு பெற முடியும். கணினி விஞ்ஞான பட்டத்தை முடிக்காத சுந்தர் பிச்சை தனது தனித்திறனை வளர்த்து கொண்டால் தான் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி நிலைக்கு உயர முடிந்தது. தான் சார்ந்த கிராமத்தை தன்னிறைவு அடையச் செய்வதே ஒருவர் தான் கற்ற கல்வி முழுமை பெறும். எந்த நிலை வந்தாலும் பெற்றோரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். எதை தானம் கொடுத்தாலும் ஒருபோதும் பெற்றோரை தானம் கொடுத்து விடாதீர்கள் என்றார். செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் செய்யதா அப்துல்லா, சின்னதுரை அப்துல்லா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image