எஸ்பிஐ ஏடிஎம்மில் சிறுவர்கள் விளையாடும் (கள்ள) இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கூலித்தொழிலாளி அதிர்ச்சி!

எஸ்பிஐ ஏடிஎம்மில் சிறுவர்கள் விளையாடும் (கள்ள) இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கூலித்தொழிலாளி அதிர்ச்சி!

மதுரை பசுமலையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் மதுரை தியாகராஜா காலனியைச் சேர்ந்த பெயிண்டர் வேலை செய்துவரும் கூலித்தொழிலாளி ராஜசேகர் என்பவர், மருத்துவ செலவுக்காக நேற்று இரவு மதுரை பசுமலையில் உள்ள அரசுக்கு சொந்தமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மில் பணம் எடுத்துள்ளார்,

முதல்முறை 2,500 ரூபாயும் இரண்டாவது முறை 2,400 ரூபாயும் எடுத்துள்ளார் இதில் இரண்டாவது முறை எடுத்தபோது 2000 ரூபாய் சில்ட்ரன் பேங்க் ஆப் இந்தியா என வந்துள்ளது இதைக்கண்டு அதிர்ந்து போன அவர் அங்கு உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு பேசி உள்ளார். எந்தவிதமான பதிலும் அவருக்கு சரியாக கிடைக்கவில்லை. என்று தெரிகிறது. இதுகுறித்து வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என கேள்வியும் எழுந்துள்ளது.அரசுக்கு சொந்தமான வங்கியிலேயே இந்த மாதிரி கள்ள நோட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்றாட கூலி வேலை பார்த்து வரும் இவர் மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும் தெரிய வருகிறது.

செய்தியாளர் , வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..