Home செய்திகள் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக தேசிய அறிவியல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக தேசிய அறிவியல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

by mohan

மதுரை தியாகராஜர் கல்லூரியை சேர்ந்த முனைவர் மாணிக்கம் மகேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் பாரம்பரிய கிராமத்து அறிவியலைப் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார். ஒரு பரியில் (நீர் இரைப்பு) உள்ள தண்ணீர் ஒரு பாத்திக்கு மிக சரியாக செலுத்தும் அளவிற்கு விவசாயிகள் துல்லியமாக அறிவியலை பயன்படுத்தினார். அந்த பரியில் உபயோக படுத்தும் பொருள் நானோ துகள் (65-150nm) வடிவில் இருப்பதாக தற்போது அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.உள்ளங்கையில் ஒரு ஆப்பிளை வைக்கும் இடத்தில் நான்கு நெல்லிக்காயும், அதே இடத்தில் நூறு கடுகையும் வைக்கலாம் அதுபோல நானோ தொழில்நுட்பம் மேற்பரப்பு தொகுதி விகிதம் (Surface volume ratio) அதிகம் என்பது ஒரு ஆட்டம் செய்யும் வேலையை 100 ஆட்டம் செய்வதால் விரிவாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும். நியூட்டனின் முதல் விதியை திருவிளையாடல் பாடல் மூலமும், நியூட்டனின் இரண்டாம் விதிக்கு மாட்டுவண்டியில் சக்கரத்தில் உராய்வை குறைப்பதற்கு எண்ணையில் நானோ டெக்னாலஜியை பயன்படுத்தும் எளிய முறையையும் விளக்கினார். அதுமட்டுமின்றி தமிழர்கள் விவசாயத்திற்கு அறிவியலை அதிசயத்தக்க வகையில் பயன்படுத்தி உள்ளனர் என்று தமிழர்களின் பெருமையை விளக்கினார்.நம் முன்னோர்கள் கருவேல மரத்தில் இருந்து கண்மையை எடுத்து உபயோகித்து வந்தனர். ஆனால் இப்போது வெளிநாடுகளின் ரசாயனம் (காஜல்) கலந்து உபயோகித்து வருகிறோம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய Wood Steel அரிவாள் இரண்டு உலோகத்தால் ஆனது, எந்த உலோகம் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லலை. நானோ கலவை (காம்போசிட்) பொருட்கள் நம் முன்னோர்கள் பயன்படுத்திய அடுக்குப் பானை மிகச்சிறந்த உதாரணம். களிமண்ணை நம் உடலில் பூசினால் உடலில் உள்ள அனைத்து நோய்க்கிருமிகள் மற்றும் ரசாயனம் வெளியேறும். திருக்கை, அம்மி, உலக்கை மற்றும் ஆட்டுக்கல் போன்றவை நானோ துகள் உருவாக்கும் உபகரணங்கள் ஆகும். தோசையில் உள்ள துகள்கள் நானோ துகள்களைப் போன்றது.

தொட்டியில் உள்ள குழந்தையை தூங்க வைப்பதற்காக நம் முன்னோர்கள் தொட்டலை சீராக ஆட்டிவிட்டு (சீரிஸை) குழந்தையை தூங்க வைத்தனர். சீரிஸை அதிர்வெண்ணும் குழந்தையின் இதயத் துடிப்பும் ஒரே சமமாக இருக்கும். நாதஸ்வரமும், நம்ம ஊரு கொட்டும் தன்னுடைய அலை நீளம், அதிர்வெண் ஆகியவை மனிதனின் அதிர்வெண்ணுடன் ஒத்துப் போவதால் அது நமக்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருமூலர் திருமந்திரத்தில் பருப்பொருள் மற்றும் அணுவின் அமைப்பை பற்றி கூறினார் அணுவைப் பிளக்க முடியும் எனக் கூறமுடியும் என்றும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருமூலர் கூறினார் கடவுள் பற்றியும் அவர் கூறியுள்ளார். தாயின் கருவில் உள்ள குழந்தையின் தற்போது நவீன சிடி ஸ்கேன் எந்திரம் மூலம் நாம் பார்த்துக் கொண்டு உள்ளோம் ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருமூலர் எந்தவித நவீன உபகரணங்களையும் குழந்தையை பற்றி சரியாக கணித்தார். ஜிங்க் மற்றும் டைட்டானியம் நானோ துகளை பயன்படுத்தினால் எந்தவித நறுமணப் பொருள்களையும் பயன்படுத்த தேவையில்லை, இதை உணர்ந்த நம் முன்னோர்கள் வேப்பிலை மற்றும் மஞ்சள் பயன்படுத்தினர். நாட்டுப்புற தோசையும் நானோ டெக்னாலஜியும், ஆட்டுஉரலில் அதிசிய அறிவியல்,பழங்காலகலப்பை,கமலைக்கிணறு,அடுக்குப்பாணையும் அயிரமீன் குழம்பும், மாரியாத்தாளும் மாடர்ன் சயின்ஸ்யும், கரிக்குழம்பும் கருப்புசாமியும் என்ற தலைப்பில் பேராசிரியர் மாணிக்கம் மகேந்திரன் அவர்கள் மாதிரி மற்றும் வீடியோ மூலம் , தமிழர்கள் அன்றாட வாழ்வின் அறிவியலை விஞ்ஞானத்துடன் ஒப்பிட்டுப் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தமிழர்களின் அறிவியல் அறிவு உலகின் தலைசிறந்தது. நமது முன்னோர்கள் வழக்கு முறைகளை பறை சாற்றுவோம். நம் ஆத்தாவின் அஞ்சறை பெட்டியை அமெரிக்காவுக்கு அடகு வைக்காமல் நமது சமூகத்தை காப்போம் என்றும் பேசினார்.

முன்னதாக இயற்பியல் துறைத்தலைவர் கபிலன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பொன்பெரியசாமி அவர்கள் தலைமையுரை வழங்கினார். கல்லூரி நிர்வாகக் குழுத்தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன் மற்றும் செயலர் பொன் ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார்கள். கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மற்றும் புலத்தலைவர் அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள். விழாவின் சிறப்பாக இந்திய அறிவியலில் பெண்கள் 2020 என்ற அறிவியல் தொழில் நுட்ப துறை வழிகாட்டுதல் படி கல்லுரியில் முனைவர் பட்டம் பயிலும் மாணவிகள் சிறப்பிக்கப்பட்டனர். இரண்டாம் நிகழ்வாக இயற்பியல் துறை மாணவ மாணவிகளின் திறமையை வெளிப்படுத்த அறிவியலில் பல போட்டிகள் நடத்தப்பட்டது. இறுதியாக இயற்பியல் பேராசிரியர் திருமதி விஜியஸ்ரீ நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே முடிவுற்றது.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!