சாத்தனூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதால் வரும் கோடை காலத்தில் குடிநீர் திட்டங்களை சமாளிப்பது சிக்கலாக இருக்கும் என பொது மக்கள் அச்சம்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணை உள்ளது. இதன் மொத்த நீர்மட்ட உயரம் 119அடி. கொள்ளளவு 73.21 மில்லியன் கன அடியாகும்.

பருவமழை கை கொடுக்காததால் 97.65 அடி மட்டுமே அணை நிரம்பியது. எனவே திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 105 ஏரிகள் மற்றும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பாசனப் பரப்புக்கு மட்டும் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சாத்தனூர் அணையில் வலது மற்றும் இடது புற கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கனஅடி நீரும் ,பழைய ஆயக்கட்டுக்கு வினாடிக்கு 400 கனஅடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 650 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அதனால் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 84.70 அடியாக குறைந்து விட்டது. மேலும் அணைக்கு நீர் கொள்ளளவு 1,920 மில்லியன் கன அடியாக குறைந்திருக்கிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் அணை நீர்மட்டம் 13 அடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாத்தனூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதால் வரும் கோடை காலத்தில் குடிநீர் திட்டங்களை சமாளிப்பது சிக்கலாக இருக்கும் என கூறப்படுகிறது.

கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தேவையான நீர் கையிருப்பு கணக்கிடப்பட்டு மீதமுள்ள தண்ணீர் மட்டுமே பாசனத்திற்கு திறப்பதாக அதிகாரிகள் கூறினாலும் இந்த ஆண்டு கடும் வறட்சி இருக்கும் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க முடியாதது என தெரிகிறது .

அதேபோல செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் 30.18 அடியாகவும், கொள்ளளவு 53.27 மில்லியன் கனஅடியாக குறைந்துள்ளது. மிருகண்டா நதி அணை நீர்மட்டம் 8.4 அடியாகவும், கொள்ளளவு 21.98 மில்லியன் கன அடியாகவும், குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 35.18 அடியாகவும், நீர் கொள்ளளவு 222.40 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

செய்தியாளர், செங்கம் சரவணக்குமார்

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..