தீபம் இந்தியா அறக்கட்டளை சார்பாக இராஜசிங்கமங்கலத்தில் சமபந்தி விழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

இராஜசிங்கமங்கலம் அன்னை மஹாலில் தீபம் இந்தியா அறக்கட்டளை சார்பாக சமபந்தி விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது..தீபம் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன் தலைமை தாங்கினார்.இராஜசிங்கமங்கலம் வட்டாட்சியர் சாந்தி முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜோசப் ஆல்பர்ட் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் சசிக்குமார், பகுர்தீன், அப்பாஸ்,கந்தசாமி, கார்த்திக்,சதக்கத்துல்லா, அஜ்மீர் கான் மற்றும் பங்குதந்தை கிளமெண்ட் ராஜா, ஆசிரியை ஜோதி,வழக்கறிஞர் கவிதா காந்தி, ஆகட்டும் பார்க்கலாம் காமராஜர் சேவா சங்கத்தின் தலைவர் சந்திரன் , ஆனந்தூர் அஜ்மல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விழாவில் நலத்திட்ட உதவிகள் மற்றும் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை கவுரவித்தல், பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்குதல், ஏழை எளியவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடந்தது.

சாதி,மதம் பேதமின்றி அனைவரும் சமமாக அமர்ந்து சமபந்தி உணவருந்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.தமிழகத்தின் பல மாவட்டங்களில் சமூக சேவை செய்பவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கும் விழாவில் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.ஒரு இலட்சம் பனை விதை விதைத்த நேசம் அறக்கட்டளை நிறுவனர் கோட்டைச்சாமி அவர்களுக்கு சமூக சேவைக்கான விருதுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை குணசேகர பிரபு,திலகவதி, ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..