பயனற்றுக் கிடக்கும் ஆழ்துளைக் கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு பொதுமக்கள் கோரிக்கை..

பயனற்றுக் கிடக்கும் ஆழ்துளைக் கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு பொதுமக்கள் கோரிக்கை..

சேலம் மாவட்டம், இடங்கணசாலை பேரூராட்சிக் குட்பட்ட 13ஆவது வார்டு முருகன் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்தாண்டு நிலவி வந்த குடிநீர் பற்றாக் குறையை போக்குவதற்கு இடங்கணசாலை பேரூராட்சி சார்பில் பொது நிதியில் இருந்து ஆழ்துளைக் கிணறு அமைக் கப்பட்டது. இதற்கு மின் இணைப்பு மற்றும் சின்டெக்ஸ் டேங்க் பொருத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்தப் பகுதியில் காவிரி குடிநீர் வசதி என்பதே இல்லை. இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் வரும் உப்புநீரை தான் குடிநீராக பயன்படுத்தி வருகின்றோம். ஏற்கனவே இருக்கின்ற ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் குறைந்து விட்டது. இதன் விளைவாக கடந்தாண்டு புதிய ஆழ் துளை கிணறு அமைக்கப்பட்டு இயந்திரம் மட்டும் அமைத்து விட்டு மின் இணைப்பும், சின் டெக்ஸ் டேங்க் வைக்கப்பட வில்லை. ஆனால் செயல்பாட்டில் உள்ளது போல் கணக்கு காட்டிக்கொண்டு மோசடி செய்விட்டதாக குற்றம்சாட்டி னார். மேலும் செயல்படாத இந்த ஆழ்துளைக் கிணற்றை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து இப் பக்கத்தில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்கு வதற்கு பேருராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்..

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..